பக்கம்:நெய்தற் கன்னி.pdf/224

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

222 இ. ുഖ് கா. கோவிந்தன்

நீர்அலர் நீலம்என அவர்க்கு அஞ்ஞான்று 50 பேரளுர் செய்த என்கண். தன்.உயிர் போலத் தழிஇ உலகத்து மன்னுயிர் காக்கும் இம்மன்னனும் என்கொலோ இன்உயிர் அன்னானைக் காட்டி, எனைத்தொன்றும் என் உயிர் காவாதது? 55

எனவாங்கு, - மன்னிய நோயொடு மருள்கொண்ட மனத்தவன், பன்மலை இறந்தவன் பணிந்துவந்து அடிசேரத், தென்னவன் தெளித்த தேஎம்போல இன்நகை எய்தினள், இழந்த தன் நலனே. 60

வரைவிடைப் பிரிந்து நீட்டித்துழித் தலைவி பிரிவாற்ற கில்லாது, நாணு வரை இறந்து, கலங்கி மொழிந்து அறிவழிந்துழி, அவன் வந்து சாரத் தெளிந்தமை கண்டார் கூறியது. -

1. அகலாங்கண் - பரந்த வானம்; அணி - அழகிய. 2. பை என்ற - ஒளி இழந்த நகல் - ஒளி 5. கணிகாரம் - கோங்கமலர்; கொட்கும் - சொரியும். 8. அரற்றா - வாய் விட்டுப் புலம்பி. 10. மான் - அசுணம் என்ற ஒரு விலங்கு, பறவை என்றும் கூறுவர். இனிய இசை கேட்பின் மகிழும்; இன்னா இசை கேட்பின் உயிர் இழக்கும்; 13. அறை - சொல்லப் படுகின்ற. 14. மறையின் - அளவில். 22. பாடு - உலகியல். 23. கதழ்வை-சினப்பாய். 27. மாந்தளிர் கொண்ட போழ்து - மாலை 29. வாம் - ஆச்சா மரம். 31. நெறிக்கவும் - பறிக்கவும். 32. ஈர்க்க - எழுத. 34. சிலைவல்லான் - காமன். 37. இனம் காப்பார் மாடு மேய்க்கும் ஆயர். 38. சாய - தளர்ந்த 46. வாய் - உண்மை. 48. உய்யா - பிழைக்க முடியாத விழுமம் - துன்பம். 52. அஞர் - துன்பம். 59. தென்னவன் - பாண்டியன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நெய்தற்_கன்னி.pdf/224&oldid=590301" இலிருந்து மீள்விக்கப்பட்டது