பக்கம்:நெய்தற் கன்னி.pdf/227

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நெய்தற் கன்னி ஒ 225

காதற் பித்தங் கொண்டு பிதற்றத் தொடங்கி விட்டது!" என்று கூறினாள். -

அவ்வாறு அவர்களை நோக்கி உரையாடிக் கொண்டிருந்தவள், "நன்று! நீங்கள் நில்லுங்கள். என் காதலன் இருக்கும் இடத்தை எப்படியாவது தேடிப் பிடித்தல் வேண்டும்!” என்று கூறிவிட்டு, அவர்கள் பார்த்துக் கொண்டிருக்கும்போதே வானத்து மதியை நோக்கினாள். "மதியிடையே வாழ்ந்து, பரந்த கடல் சூழ்ந்த இந்நிலவுலகனைத்தையும் இருந்த இடத்தில் இருந்தவாறே பார்க்கும் பேறு பெற்ற முயலே! என் காதலன், இந்நிலவுலகில் வாழும் இடத்தை அருள் கூர்ந்து எனக்குக் காட்டுவாயாக! காட்ட மாட்டாயேல், வேட்டை நாயை உன்மீது ஏவி விடுவேன். வேட்டுவர்க்கு நீ இருக்கும் இடத்தைக் காட்டிக் கொடுத்து விடுவேன். அறிவு திரிந்து அலையும். என் அல்லலைத் தீர்க்காவிட்டால், உன்னை யும், உனக்கு இடம் அளித்திருக்கும் மதியையும் விழுங்கி விடுமாறு பாம்பைத் துரத்தி விடுவேன்!” எனப் பிதற்றினாள்.

அவள் அவ்வாறு பிதற்றித் தன் மனத் துயரை வெளிப்படுத்திக் கொண்டிருக்கும்போது, திங்கள் வெண் மேகத்தின் இடையே சென்று மறைந்தது. அது கண்ட அவள், தன் வேண்டுகோளை ஏற்றுக் கொண்ட முயல், மதியையும் துணைக்கு அழைத்துக் கொண்டு, தன் காதலனைத் தேடிச் செல்வதாகக் கருதினாள். உடனே, மீண்டும் அம்முயலை நோக்கி, "நன்று முயலே! என்பால் நீ சிறிதே அருள் உள்ளம் கொண்டாய் போலும்!" எனக் கூறி ஆறுதல் கொண்டாள். -

நெய்தல்-15

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நெய்தற்_கன்னி.pdf/227&oldid=590304" இலிருந்து மீள்விக்கப்பட்டது