பக்கம்:நெய்தற் கன்னி.pdf/231

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நெய்தற் கன்னி ஒ 229

என்று இகழ்ந்து கூறி, என்னை நகைக்கினும் நகைக்கட்டும். இவ்வாறு நான் காதல் நோய் பெற்று, உயிரிழந்து போகும் நிலைக்கு என்னைக் கொண்டு போய் விட்டவன் மார்பு, இத்தகைய கொடுமையுடையது என்பதை, அவன் என்னை முதன் முதலாகக் கண்டு காதல் கொண்ட அன்று அறிந்திருப்பேனாகில், நான் அவன் காதலை ஏற்று, அவன் மார்பைத் தழுவியிருக்க மாட்டேன்! அந்தோ! அதை அன்று அறிந்திலேன்! என் செய்வேன்!”

இவ்வாறு அவள் கடலோடு புலம்பிக் கொண் டிருக்கும் போது, அவளை வருத்தும் அக் காதல் நோய் அழியும்படி அழியாப் பெருங்காதல் உடைய அவள் காதலன் விரைந்து வந்து சேர்ந்தான். உடனே, அறவழி அறிந்து வாழும் நல்லோன் ஒருவன் குறித்துத் தீயோர் கூறிய பழிச்சொற்கள் எல்லாம், நல்லோர் கூடியிருக்கும் அவையில் நின்று ஆராயத் தொடங்கியதும் அழிந்து போவது போல், அவள் நெற்றியில் படிந்திருந்த பசலை பறந்து போய்விட்டது.

"நன்னுதால் காண்டை! நினையா, நெடிது உயிரா, என் உற்றாள்கொல்லோ இஃதொத்தி, பன்மாண் நகுதரும்; தன் நானுக் கைவிட்டு, இகுதரும் கண்ணிர் துடையாக், கவிழ்ந்து நிலன் நோக்கி, அன்ன இடும்பை பல செய்து, தன்னை 5 வினவுவார்க்கு ஏதில சொல்லிக் கனவுபோல் தெருளும்; மருளும்; மயங்கி வருபவள் கூறுப கேளாமோ சென்று. > 'எல்லா! நீ என் அணங்கு உற்றனை? யார் நின் இது -

. செய்தார்?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நெய்தற்_கன்னி.pdf/231&oldid=590308" இலிருந்து மீள்விக்கப்பட்டது