பக்கம்:நெய்தற் கன்னி.pdf/232

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

230 & புலவர் கா. கோவிந்தன்

நின் உற்ற அல்லல் உரை என என்னை வினவுவீர்! தெற்றெனக் கேண்மின் ஒருவன் 'குரல் கூந்தால்! என் உற்ற எவ்வம் நினக்கு யான் உரைப்பனைத் தங்கிற்று என் இன்னுயிர் என்று மருவூட்டி மாறியதற்கொண்டு எனக்கு மருவுழிப்பட்டது என் நெஞ்சு. எங்கும் தெரிந்தது கொள்வேன் அவன் உள் வழி

பொங்கிரும் முந்நீர் அகம் எல்லாம் நோக்கினை, திங்களுள் தோன்றி யிருந்த குன்முயால்! எம்கேள் இதனகத்து உள்வழிக் காட்டிமோ, காட்டியாயாயின், கதநாய் கொளுவுவேன்; வேட்டுவர் உள்வழிச் செப்புவேன்; ஆட்டி மதியொடு பாம்பு மடுப்பேன்; மதி திரிந்த என் அல்லல் தீராய் எனின்.

என்றாங்கே, உள்நின்ற எவ்வம் உரைப்ப மதியொடு வெண்மழை ஒடிப் புகுதி, சிறிது என்னைக் கண்ணோடினாய் போறி நீ. நீடிலைத் தாழைத் துவர்மணல் கானலுள் ஒடுவேன்; ஒடி ஒளிப்பேன்; பொழில்தொறும் நாடுவேன்; கள்வன் கரந்திருக்கற்பாலன் கொல்? ஆய்பூ அடும்பின் அலர்கொண்டு, உதுக்காண் எம் கோதை புனைந்த வழி. - . . . . . . .

10

15

20

25

30

உதுக்காண், சாஅய் மலர்காட்டிச் சால்பிலான் யாம் ஆடும்

பாவை கொண்டு ஒடியுழி உதுக்காண், அம்தொய்யில் பொறித்த வழி.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நெய்தற்_கன்னி.pdf/232&oldid=590309" இலிருந்து மீள்விக்கப்பட்டது