பக்கம்:நெய்தற் கன்னி.pdf/236

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

234' & புலவர் கா. கோவிந்தன்

வீதி யெல்லாம் சுற்றி அலைந்தாள்; வாயில் வந்தன எல்லாம் பிதற்றினாள். வம்பர்கள் சூழ்ந்து வர, ஊர் மன்றம், ஊர்ப்புறம் எங்கும் திரியத் தலைப்பட்டாள்.

ஒரு நாள் ஊர்ப் பெண்டிர் சிலர் அவளைச் சுற்றி நின்று அவள் செய்யும் சிறு செயல்களைப் பார்த்துப் பரிகசித்துக் கொண்டிருந்தனர். உடனே அவள் அவர் களைப் பார்த்து, "மக்களால் விரைந்து விரும்பப்படும் காமம், காணும் நள்ளிரவில் பயன் அளித்து, நனவில் பயன் அளிக்க மறுத்து மாறுபடும் கனவுபோல் நிலை யற்றது. இதோ பாருங்கள், அக் காமத்திற்கு அடிமைப் பட்ட ஒருத்தி, அது கைகூடப் பெறாமையால் நெட்டுயிர்ப்புக் கொள்வாள்; தன் காதல், அதை அளித்த காதலன் என இவை குறித்துக் காண்பாரையெல்லாம் வினவுவாள்; மனம் மருளுவாள்; கயல் மீன் போன்ற கண்களில் நீர் முத்து முத்தாய் வெளிப்பட, அவ்வாறு வெளிப்படும் நீர் ஒழுக, மழையிடையே தோன்றும் முழுமதி போல், முகம் தோன்ற நின்று ஓயாது அழுவாள். நீண்டு வ்ளர்ந்த கூந்தலையுடைய இவள், தன் பெண்மைப் பண்புகள் அவ்வளவையும் கைப்பற்றிக் கொண்டு கைவிட்டுச் சென்றவனை நினைந்து வருந்துவாள்; சிறிது நாழிகை சென்றதும், அவனை மறந்தவள் போல், விலா வலிக்க வாய் திறந்து நகைப்பாள். மருள் கொண்டு திரிவாள். தன் உயிரினும் சிறந்த நாணையும், பிற பெண்மை நலங்களையும் பொருட்படுத்தாமல், காமம் ஒன்றைக் கருத்தில் இருத்தி அலைகின்றாள்! என்று கூறி என்னைப் பழித்து நகைக்காதீர்கள். என் நிலை கண்டு இரங்காது எள்ளி நகைக்கும் மாக்களே! சுருக்கமாகக் கூறுகிறேன், கேளுங்கள். மகளிர் தோளை மணந்த காதலர்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நெய்தற்_கன்னி.pdf/236&oldid=590313" இலிருந்து மீள்விக்கப்பட்டது