பக்கம்:நெய்தற் கன்னி.pdf/238

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

236 இ. புலவர் கா. கோவிந்தன்

செல்லும் காட்டு வழியில் பெருமழை பெய்வீராக!” என வேண்டிக் கொண்டாள்.

வெண் மேகத்தை நோக்கி அவ்வாறு வேண்டிக் கொண்டவள், கடும் பகல் ஞாயிற்றின் வெம்மை தன்னைத் தாக்குவதை உணர்ந்தாள். உடனே தன்னைச் குழ்ந்து வரும் ஊராரைப் பார்த்து, "ஊர்ப் பெண்களே! என் கண்களின் உறக்கத்தைக் கவர்ந்து கொண்டு, என்னை மறந்து கை விட்டி காதலன், என் பெண்மைப் பண்புகள் எல்லாம் கெட்டு அழியும்படி எனக்களித்த காதல் நோய், குளிர் போக வேது கொள்வது போல், தோன்றுகிறது, இக்கடும்பகல் ஞாயிற்றின் வெம்மை. அது உமக்கு எவ்வாறு உளதோ? கூறுங்கள்.” எனக் கேட்டு நின்றாள்.

- அவள் அவ்வாறு கேட்டு நிற்கும்போதே ஞாயிறு மெல்ல மறையத் தொடங்கியது. உடனே அஞ்ஞாயிறைப் பார்த்து, "ஞாயிறே ! உன் கதிர்கள் எல்லாவற்றையும் பரப்பிக் காய்ந்துவிட்டு, இப்பகற் காலத்தோடே உன் கடமையை முடித்துக் கொண்டு சென்று விடாது, நின்று காயுமாறு உன்னை வேண்டிக் கொள்கிறேன். நீ சென்று விட்டால் தனிமை யுணர்ச்சி ஊட்டும் பொல்லாத மாலைக் காலம் வந்து என்னைக் கொல்லாமல் போகாது. அதனோடு நான் உயிரிழந்து போகாது நிற்றல் இயலாது!” என்று கூறி வேண்டிக் கொண்டாள். -

- ஆனால் ஞாயிறு அவள் வேண்டுகோளை ஏற்றுக் கொண்டிலது. மலையிடையே புகுந்து மறையத் தொடங்கி விட்டது. அதைக் கண்ட அவள் மீண்டும் அதைப் பார்த்து, "ஞாயிறே! செல்லாது நிற்றல் உன்னால் இயலாது என்றால், இதையாவது செய். இன்று மறைந்து, நாளைக் காலையில் கடலிடையே தோன்றும் போது, என்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நெய்தற்_கன்னி.pdf/238&oldid=590315" இலிருந்து மீள்விக்கப்பட்டது