பக்கம்:நெய்தற் கன்னி.pdf/241

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நெய்தற் கன்னி இ. 239

ஆகவே குறை நெஞ்சிற்கு உளதே அல்லது, அவனுக்கு இல்லை. இதை நீங்கள் அறிதல் வேண்டும்!” என்று கூறினாள்.

அந்நிலையில் வானத்தைக் கருமேகம் வந்து மூடிக் கொள்வதைக் கண்டாள். உடனே அவள் கருத்து ஊராரை விட்டுக் கார் முகில் மேல் சென்றது. "கருத்துக் கனத்துத் திரண்டு வரும் கார்மேகமே! என் கையில் நிறைந்து கிடந்த என் கை வளைகளைக் கழலப் பண்ணிய கொடியேன் அளித்த காமநோயால் மூண்ட தீ, என் மயிர்க் கால் தோறும் நின்று எரிகிறது. ஆகவே, அவ்வெம்மை தணியும்படி, ஒரு சேரச் சென்று கடல் நீரை முகந்து வந்து என் மேல் ஒருங்கே பெய்யுமாறு உங்களை வேண்டிக் கொள்கிறேன்!” என்று கூறிப் புலம்பினாள்.

இவ்வாறு பலப்பல பிதற்றிப் புலம்பி வருந்தும் நெஞ் சோடு வாடி, "என் கணவனை யாரேனும் கண்டீரோ? என வழிவருவார்களை யெல்லாம் வினவித் திரியுங்கால், ஊரை ஒன்று கூட்டும் அவள் நோயைக் களைய அறக் கடவுளே திருவுளம் கொண்டாற் போல், அவள் காதலன் வந்து சேர்ந்தான். உறக்கத்தைக் கவர்ந்து கொண்டு, பின்னர் ஒரு போதும் நினைக்காமல் நீங்கி விட்டவன் வரக் கண்டதும், திருமால் மார்பில் பிரிவறச் சேர்ந்து நிற்கும் திருமகள் போல், அவள் அவன் மார்பை அணைத்துக் கொண்டாள். உடனே, ஞாயிறு வரக் கண்டதும், நில்லாது ஓடி மறையும் இருள்போல், அவளைப் பற்றி வருத்திய பித்தமும் அவளை விட்டு

அகன்றது. - - "துணையுநர் விழைதக்க சிறப்புப்போல், கண்டார்க்கு நனவினுள் உதவாது நள்ளிருள் வேறாகும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நெய்தற்_கன்னி.pdf/241&oldid=590318" இலிருந்து மீள்விக்கப்பட்டது