பக்கம்:நெய்தற் கன்னி.pdf/243

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நெய்தற் கன்னி ஆ 241

புல்லென் மருள்மாலைப்போழ்து இன்றுவந்து என்னைக் கொல்லாதுபோதல் அரிதால், அதனோடு யான் 30 செல்லாது நிற்றல் இலேன்.

ஒல்லை.எம் காதலர்க்கொண்டு கடல்ஊர்ந்து காலைநாள் போதரின், காண்குவேன் மன்னோ! பனியொடு மாலைப்பகை தாங்கி யான், . இனியன் என்று ஒம்படுப்பல் ஞாயிறு! இனி. 35

ஒள்வளை ஒடத்துறந்து துயர்செய்த கள்வன்பாற்பட்டு அன்று ஒளித்து, என்னை உள்ளிப் பெருங்கடல் புல்எனக், கானல் புலம்ப, இருங்கழிநெய்தல் இதழ்பொதிந்து தோன்ற, விரிந்துஇலங்கு வெண்ணிலா வீசும் பொழுதினான், 40 யான்வேண்டு ஒருவன், என்அல்லல் உlஇயான், தான் வேண்டுபவரொடு துஞ்சும்கொல்? துஞ்சாது வானும் நிலனும் திசையும் துழாவும்-என் ஆனாப் படர்மிக்க நெஞ்சு.

ஊரவர்க் கெல்லாம் பெருநகை யாகிஎன் 45 ஆருயிர் எஞ்சும்மன், அங்குநீ சென்றி! நிலவுஉமிழ் வான்திங்காள்! ஆய்தொடி கொட்ப, அளிபுறம்மாறி, அருளான் துறந்த அக் காதலன் செய்த கலக்குறு நோய்க்கு, ஏதிலார் எல்லாரும் தேற்றார், மருந்து. 50

வினைக்கொண்டு என்காமநோய் நீக்கிய ஊர்: எனைத்தானும் எள்ளினும், எள்ளலன் கேள்வன்; நினைப்பினும் கண்ணுள்ளே தோன்றும், அனைத்தற்கே ஏமராது ஏமராவாறு. ..-----

நெய்தல்-16

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நெய்தற்_கன்னி.pdf/243&oldid=590320" இலிருந்து மீள்விக்கப்பட்டது