பக்கம்:நெய்தற் கன்னி.pdf/244

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

242 ↔ புலவர் கா. கோவிந்தன்

கனைஇருள் வானம்! கடல்முகந்து என்மேல் 55 உறையொடு நின்றீயல் வேண்டும் ஒருங்கே, நிறைவளை கொட்பித்தான் செய்த துயரால் இறைஇறை பொத்திற்றுத் தீ. எனப்பாடி, .

நோயுடை நெஞ்சத்து எறியா, இணைபு, ஏங்கி, 60 ய்ாவிரும் எம்கேள்வ ற்காணிரோ? என்பவட்கு ஆர்வுற்ற பூசற்கு அறம்போல எய்தந்தார்; பாயல்கொண்டு உள்ளாதவரை வரக்கண்டு மாயவன் மார்பில் திருப்போல்பவள் சேர, ஞாயிற்று முன்னர் இருள்போல மாய்ந்தது என் 65 ஆயிழை உற்ற துயர்.

வரைவிடைப் பிரிந்து நீட்டித்துழித், தலைவி பிரிவாற்றகில்லாது, நாணுவரை பிறந்து கலங்கி மொழிந்து அறிவழிந்துழி, அவன் வந்து சாரத் தெளிந்தமை கண்டார் கூறிற்று. -

1. துனையுநர் - விரைவார். 4. உயிர்க்கும் - பெருமூச்சு விடுவாள்; உலம் வரும்- மனம் மருளுவாள்;5. அரிப்ப-நீர்துளிக்க 7. ஒலி - தழைத்த, துய்த்து - நுகர்ந்து. 8. உள்ளி - நினைந்து, 9. ஆலி - ஆரவாரம் செய்து. 13. கூர் - மிக். 14. சுரம் - காட்டுவழி, வல்லை - விரைந்து. 15. ஊழ் - முறையாக. 16. வீழ்வார் - விரும்புவார்; ஞாலம் - உலகம். 18. தாழ்பு- பணிந்து. 19. நைதல்எரித்தல்; பாஅய் - பரந்து 22. கொண்மு - மேகம். 23. வேது கொள்வது - நோய் நீங்க வெப்பம் ஊட்டுதல். (ஒத்தடம் கொடுத்தல்.) 28. நின்றியல் - நிற்றல். 33. போதரின் - வந்தால். 36. ஒள்- ஒளி.37. உள்ளி- நினைத்து.42. துஞ்சாது - சோம்பி இராமல். 43. துழாவும் - தேடும். 44. ஆனா- குறையாத 46. எஞ்சும் - பிரியும். 47. கொட்ப-கழல.52. எனைத்தானும் - சிறிதும், 36.உறை- மழை. 58. இறை- மயிர்க்கால்; பொத்திற்று - மூண்டது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நெய்தற்_கன்னி.pdf/244&oldid=590321" இலிருந்து மீள்விக்கப்பட்டது