பக்கம்:நெய்தற் கன்னி.pdf/245

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

29

யாமம்! நீ துஞ்சலை மன்

தம் காதலைப் பெற்ற தாயும் பிற உற்றாரும் 'உணர்ந்து கொள்வதற்கு முன்பாகவே வந்து வரைந்து கொள்ளுமாறு தன் காதலனை வேண்டிக் கொண்டாள் ஒரு பெண். அவனும் அதற்கு இசைந்திருந்தான். ஆனால், அவன் அவளிடமும் சொல்லிக் கொள்ளாமல் வெளிநாடு செல்ல நேர்ந்து விட்டது. அவன் போய் விட்டான். திருமணத்திற்குரிய ஏற்பாடுகளோடு அவன் வருவான் வருவான் என எதிர் நோக்கியிருந்தாள் அவள். நாள் பல ஆகியும் அவன் வந்திலன். அதனால், ஒருவேளை அவன் தன்னைக் கைவிட்டானோ என்ற எண்ணம் அவள் உள்ளத்தில் மெல்லத் தலை தூக்கிற்று. அவ்வளவே. மானமே உயிர் என மதிக்கும் அம்மங்கை நல்லாள் மருள்கொண்டு விட்டாள். வீட்டில் அடைபட்டிருப்பதை வெறுத்தாள். தன் மனம் போனபடியெல்லாம் திரியவும் பிதற்றவும் தொடங்கினாள். -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நெய்தற்_கன்னி.pdf/245&oldid=590322" இலிருந்து மீள்விக்கப்பட்டது