பக்கம்:நெய்தற் கன்னி.pdf/249

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நெய்தற் கன்னி & 247

ஒடுவது போல், உலகைச் சுழன்று சுழன்று வரும் ஆகவே, என் நோயை அதன்பால் உரைத்தும் பயன் இல்லை!" எனக் கூறி மனம் உடைந்தாள்.

அவ்வாறு மனம் உட்ைந்தவள் கண்களில், பேரூர்த் தெருக்களில், ஆண்டு முதிர்ந்த பெரியோர்கள் படுத்து உறங்குவதைக் கண்டாள். தான் வருந்த, அவர் துயில்வதைக் காண, அவள் உள்ளம் பொறுக்கவில்லை. உடனே அவர்களைத் தட்டி எழுப்பிப், "பெரியோர்களே! நீருண்ட மேகம் எல்லாம் ஒன்று திரண்டு வந்து நின்று பெய்யினும், என் மேனியைப் பற்றி வருத்தும் காமத் தீ அவியாது போல் தோன்றுகிறது. ஆகவே, உலகில் உள்ள நீரை எல்லாம் ஓரிடத்தே தேக்கி வைத்து, என்னை அதில் இட்டு அழுத்தி என் உயிரை ஓம்புவது உங்கள் கடன்" எனக் கூறி வேண்டிக் கொண்டாள். -

அவர் கடமையை அவர்களுக்கு நினைவூட்டியவள், தன் நோயின் தன்மையை அவர்க்குத் தெளிவாக உணர்த்த விரும்பிக், "காதலன் பிரியாது என் அண்மையில் இருப்பினும், அவன் அளிக்கும் இன்பத்தை ஆர நுகர வேண்டும் என அமைதி யிழந்து அலையும்; அவன் பிரிந்து போய் விட்டாலோ, இவ்வுடல் என்னை வாட்டி வருத்தும். இவ்வாறு இரு நிலையிலும் வருந்துவதை நான் ஆற்றேன். என்னைப் பற்றி வருத்தும் இக்காம நோய், படைக்கலங்களால் பாழாக்க முடியாத பெரிய கோட்டை போல் அழியாவரம் பெற்றது. அக்காம நோயால் வருந்தும் நான் பொறியால் இயங்கும் பாவை போல், உலாவி நடை பிணமாகி விட்டேன்!”

என்று பலப்பல கூறி அவள் புலம்ப, வறண்ட வானத்தில் பறந்து, மழைத்துளியைப் பெற வேண்டி மனம்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நெய்தற்_கன்னி.pdf/249&oldid=590326" இலிருந்து மீள்விக்கப்பட்டது