பக்கம்:நெய்தற் கன்னி.pdf/25

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நெய்தற் கன்னி இ. 23

கணவன் பிரிவால் கவலை கொண்டிருப்பவளின் மனத்துயரை மாய்க்கவேண்டும் என்ற நல்லெண்ணத்தால் தோழி மாலைக் காட்சிகளைக் காட்டி வந்தாள். ஆனால் அவள் கண்ட பயன் வேறு. மாலையோ மற்ற இன்பக் காட்சிகளோ மகளிர்க்கு, அவர்கள் தத்தம் கணவரோடு கூடிக் களித்திருக்கும் பொழுது மட்டுமே இன்பம் அளிக்கும். ஏனைய காலங்களில் அவை அவர்க்கு இன்பம் அளிக்கா. மாறாகக் கணவனைப் பிரிந்து தனித்திருக்கும் காலத்தில், கூடியிருந்த காலத்தில் இன்பம் அளித்த அதே பொருள்கள், அவர்க்குப் பெருந்துன்பம் தரும் பெற்றியவாம். அதை உணர்ந்திலள் தோழி; உணர்ந்திலள் என்பதினும், அவ்விளையாளின் மனத்துயரைப் போக்க வேண்டும் எனும் ஆர்வ மிகுதியால் அதை மறந்து விட்டாள் என்பதே பொருந்தும். அதனால் மாலைக் காட்சிகளை அவ்வாறு காட்டிக் கொண்டே வந்தாள்.

மாலைக் காட்சிகளைத் தோழி காட்டக் காட்ட, அப் பெண்ணின் உள்ளத்தில் படிப்படியாகத் துயர் வளர்ந்து கொண்டே வந்தது. மனைப்புறமாதலின் அம் மனத்துயரை ஒருவாறு அடக்கிக் கொண்டாள். இறுதியாக வீடு வந்து சேர்ந்ததும், கண்ட மாலைக் காட்சிகளின் மாண்பினை உணர்ந்தாயோ என்று. தோழி கேட்கவே, அவள் அகத்தில் அடைப்பட்டுக் கிடந்த அத்தனை துயரும் அவ்வகத்தைப் பிளந்து கொண்டு வெளியே பாய்ந்து விட்டன. "தோழி! நீ காட்ட நான் கண்டது மாலைக் காலத்தை அன்று: என் உயிர் போக்கும் கொலைக்களத்தை தோழி! நீ காட்டிய இக் காட்சிகளும் நிகழ்ச்சிகளும் கணவனைப் பிரிந்து கலங்கியிருக்கும் என் போலும் மகளிரின் உயிரை, அன்னார். உடலினின்றும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நெய்தற்_கன்னி.pdf/25&oldid=590102" இலிருந்து மீள்விக்கப்பட்டது