பக்கம்:நெய்தற் கன்னி.pdf/250

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

248 ஆ. புலவர் கா. கோவிந்தன்

சுழலும் வானம்பாடிக்கு அம்மழைத் துளி கிடைத்தது. போல், நல்ல அழகு வாய்ந்த மார்பையுடைய அவள் காதலன் வந்து அவளை அணைத்துக் கொள்ள, அவளைப் பற்றி வருத்திய அல்லல் அனைத்தும் அப்போதே அகன்று விட்டது. +. - “உரைசெல உயர்ந்தோங்கிச் சேர்ந்தாரை ஒருநிலையே வரைநில்லா விழுமம் உறிஇ நடுக்கு உறைத்துத்

தெறல்மாலை

அரைசினும் அன்பு இன்றாம் காமம்; புரைதீர அன்னமென் சேக்கையுள் ஆராது அளித்தவன் துன்னி அகலத், துறந்த அணியளாய், 5 நானும் நிறையும் உணர்கல்லாள், தோள்நெகிழ்பு பேரமர் உண்கண் நிறைமல்க, அந்நீர்தன் கூர்எயிறுஆடிக், குவிமுலைமேல் வார்தரத், தேர்வழி நின்று தெருமரும்; ஆயிழை கூறுப கேளாமோ சென்று. 10

எல்இழாய்! எற்றி வரைந்தானை நாணு மறந்தாள் என்று உற்றணிர் போல வினவுதிர்; மற்றது .. கேட்டிமின் எல்லீரும் வந்து.

வறம்தெற மாற்றிய வானமும் போலும்; - நிறைந்து என்னை மாய்ப்பதோர் வெள்ளமும் போலும் 15 சிறந்தவன் தூவறநீப்பப் பிறங்கி வந்து - என்மேல் நிலைஇய நோய்.

நக்கு நலனும் இழந்தாள் இவள் என்னும் தக்கவிர் போலும் இழந்திலேன் மன்னோ; மிக்க என் நானும் நலனும் என்உள்ளமும் . 20

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நெய்தற்_கன்னி.pdf/250&oldid=590327" இலிருந்து மீள்விக்கப்பட்டது