பக்கம்:நெய்தற் கன்னி.pdf/252

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

250 ళీ புலவர் கா. கோவிந்தன்

இருப்பினும் நெஞ்சம் கனலும்; செலினே வருத்துறும் யாக்கை வருந்துதல் ஆற்றேன்; அருப்பம் உடைத்து என்.உள் எவ்வம்; பொருத்திப் பொறிசெய் புனைபாவை போல வறிது உயங்கிச் செல்வேன் விழுமம் உழந்து. 50 என ஆங்குப் பாட அருளுற்று, வறங்கூர் வானத்து வள்உறைக்கு அலமரும் புள்ளிற்கு அதுபொழிந்தாங்கு மற்றுத்தன் நல்லெழில் மார்பன் முயங்கலின் அல்லல் தீர்ந்தன்று ஆயிழை பண்பே. 55

வரைவிடைப் பிரிந்து நீட்டித்துழித் தலைவி பிரிவாற்ற கில்லாது, நாணு வரையிறந்து கலங்கி மொழிந்து அறிவு அழிந்துழி, அவன் வந்து சாரத் தெளிந்தமை கண்டார் கூறியது.

1. உரை - புகழ், செல - உயர, விழுமம் - கொடுமை. 2. தெறல் மாலை - அழிக்கும் இயல்புடைய 3. புரை திர - புகழ்கெட 4. ஆராது - நிறையாது. 8. வார்தர - ஒழுக. 14. வாரம் - கோடை, நெற - அழிக்க. 16. தூவற - வலி கெடும்படி, நீப்ப - பிரிய, பிறங்கி - திரண்டு. 23. செக்கரம் - சிவப்பு 26. புரைதவ - புகழ்கெட. 28. வளாகம் - உலகம், 32. பிணை - பெண்மான். 38. துயில் ஆராது - உறங்காது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நெய்தற்_கன்னி.pdf/252&oldid=590329" இலிருந்து மீள்விக்கப்பட்டது