பக்கம்:நெய்தற் கன்னி.pdf/254

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

252 ல் புலவர் கா. கோவிந்தன்

செல்ல வேண்டிய தாயிற்று. காதலியைக் கண்டு, நிலைமையைக் கூறி விடை பெற்றுச் செல்வதற்கும் ஊர்க்காவலன் வாய்ப்பளித்திலன். அதனால் அவளிடம் கூறிக் கொள்ளாமலே சென்று விட்டான் இதை யெல்லாம் அவள் அறிவாள். அவன் இன்று வருவான், நாளை வருவான், என ஒவ்வொரு நாளும் எதிர்நோக்கி ஏமாந்தாள். அது தொடர்ந்து நிகழவே அவள் அவன் அன்பையே ஐயங்கொள்ள வேண்டியதாயிற்று. காதலித்தவன் உண்மையிலேயே கைவிட்டிருந்தால் தன் கற்பு என்னாவது என நினைத்தாள். தாயினும் சிறந்தது நாண் என்றால், கற்பு உயிரினும் சிறந்தது அல்லவோ! அதை இழந்து உயிர் வாழ்வது கூடுமோ என எண்ணம் எழவே, அவள் அறிவு மயங்கிவிட்டது. பித்தம் கொண்டு பிதற்றித் திரியத் தலைப் பட்டாள். சிலம்பு ஒலியும் மெல்லக் கேட்கும்படி, பைய அடியெடுத்து வைத்தவள் அலைந்து திரிந்தாள். அவள் அழகு அழிந்து விட்டது. உணவை வெறுத்தது அவள் உள்ளம். நாணை மறந்து நடுத்தெருவில் நின்று, நாலுபேர் பார்க்க நகைத்தாள். பெண்மை இழந்து பிதற்றினாள். அழுவாள் சிறிது நேரம், சிரிப்பாள் சிறிது நேரம். வீட்டின் தலைவாயிலைத் தாண்டி அறியாதவள், ஊரெல்லாம் சுற்றி அலைந்தாள்.

ஒரு நாள் மாலை, அவள் வழக்கம்போல் வீதியில் பிதற்றியவாறே சென்று கொண்டிருந்தாள். அந்நிலையில் அவளைச் சிலர் பார்த்து விட்டார்கள். அவளைக் காணவே, அவர்களுக்குக் காதல் மீது இருந்த உயர்ந்த எண்ணமே போய்விட்டது. "தெளிந்த மதுவையும் கள்ளையும் உண்டவர் அறிவு மயங்கும்; நல்ல சொற்களே அவர் வாயினின்றும் வெளிப்படா; அவர் செய்வன

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நெய்தற்_கன்னி.pdf/254&oldid=590331" இலிருந்து மீள்விக்கப்பட்டது