பக்கம்:நெய்தற் கன்னி.pdf/256

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

254 ல் புலவர் கா. கோவிந்தன்

இவர்களே போதும், நீங்கள் வேறு என்னை வளைத்துக் கொண்டு வேடிக்கை பார்க்க வேண்டாம்; நான் பெற்று வருந்தும் இக்காம நோயை, நீங்கள் பெற்று வருந்தாதவர் போலும் ! உங்களுக்கு ஒர் உண்மை கூறுகிறேன், கேளுங்கள். காதல் நோயால் கருத்திழந்து இவ்வாறு அலைந்து திரிவதும், காதல் வகையுள் ஒன்று என்று அற நூல்களும் ஏற்றுக் கொண்டுள்ளன. காதலித்தவர், காதலியரின் மதிகெட்டு மருள் கொள்ளும்படி கைவிட்டுச் சென்றால், அக்க்ாதலி யரின் நிலை, மலர்கள் தம் மணத்தையும், மனங்கவர் நிறத்தையும், தம் மென்மை இயல்பையும், இனிய மதுவையும் இழந்து மாண்பு கெட்ட நிலைக்கு நிகராம் - இவ்வுண்மை உணர்ந்து அடங்கி யிராமல், ஓடிவந்து, என்னை வளைத்துக் கொண்டு, என்னை விழுங்கி விடுபவர் போல் பார்க்காதீர்கள். என்னை விட்டுப் போய் விடுங்கள்,” என்று கூறிச் சினந்து கொண்டாள். * - .

சிறிது நாழிகை சென்றது. அவள் சினமும் சிறிதே குறைந்தது. உடனே அவர்களை அணுகி, "என்பால் உறவுடையார் போல் என்னிடம் வந்து என் நிலை கண்டு வருந்துவோரே! நீங்கள் நெடிது வாழுங்கள். காதலன் கண்களோடு கலந்துவிடும் என் கண்ணின் புருவம், பருத்த தோள்கள், சிறுத்த இடை, அழகிய சிறு கருமேகம் போல், கருத்து நீண்ட கூந்தல் ஆகிய என் செல்வங்களை, அவற்றிற்குரிய விலை கூறி விற்கத் தெரியாமல், எவனோ ஒருவனுக்கு விற்று விட்டு, அவன் விரித்த மாயவலைக்குள் அகப்பட்டுக் கொண்டு வருந்துகிறது என் நெஞ்சு. நான் என்ன செய்வேன்!” என்று கூறி ஏங்கினாள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நெய்தற்_கன்னி.pdf/256&oldid=590333" இலிருந்து மீள்விக்கப்பட்டது