பக்கம்:நெய்தற் கன்னி.pdf/260

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

258 இ. புலவர் கா. கோவிந்தன்

ஞாயிறு அவள் கூறிய எதையும் கேளாமலே சென்று மறைந்து விட்டான். அதனால் காதல் நோய் பெருகிக் கொடுமை செய்தது. உடனே, அவரவர் செய்யும் நன்மை தீமைகளுக்கேற்ப நடுநின்று தண்டம் அளிக்கும் கூற்றுவனை அழைத்தாள். அவன் வந்து தன்முன் நிற்பதாகக் கனவு கண்டு, "நீதியை மறந்து, ஒருவர்க்காகப் பரிந்து பாவச் செயல் புரியாத பெரியோனே; சுறாமீன் கொடியேந்திய கொடியவனாகிய இக்காமன் செய்யும் கொடுமைகளை, உன் ஒலைச்சுவடியில் குறித்து வைத்துக் கொள்வாயாக!” எனப் பிதற்றிப் பெரிதும் வேண்டிக் கொண்டாள். - -

காலக் கடவுளை வேண்டிக் கொண்டவள். அவனை மறந்து, காமனை நினைந்து கொண்டாள். "ஏ. காமனே தன்மீது அன்பிலாதான் ஒருவனுக்காகத் தன் நெஞ்சை நொந்து கொள்ளும்படி மகளிரை வாட்டும் இக் கொடுஞ் செயலில், உன் மலர்க்கணைகள், மகளிர் எல்லோரிடத்தும் ஒரே தன்மையாய் நடந்து கொள்ளுமோ, அல்லது என்னிடம் மட்டும்தான் அவ்வாறு நடந்து கொள்ளுமோ கூறு," எனக் கேட்டு அவனை வெறுத்தாள்.

பிறகு, "உடல் தளர்ச்சியால் என் கண்கள் சிறிதே உறக்கம் கொள்ளும் காலம் அறிந்து, என்னைச் செயல் இழக்கச் செய்து கொடுமை செய்த அவன் வந்து தோன்று வனாயின், கலங்கிய என் கண்களால் காண மெல்லக் கண் விழிப்பேன். வந்தவன் மீண்டும் ஓடி மறைந்து விடாதபடி அவன் மேலாடையைப் பற்றிக் கொள்வேன். காதலித் அன்று நான் பெற்றிருந்த பேரழகைப் பிரிவுத் துயரால் இழந்து பெரிதும் வேறுபட்டிருக்கும் என்னைக் காணும் அவன், என்னைத் தன் காதலிதானோ அல்லது வேறு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நெய்தற்_கன்னி.pdf/260&oldid=590338" இலிருந்து மீள்விக்கப்பட்டது