பக்கம்:நெய்தற் கன்னி.pdf/264

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

262 命 புலவர் கா. கோவிந்தன்

நல்கா ஒருவனை, நாடி யான் கொள்வினைப், பல்கதிர் சாம்பிப், பகல் ஒழியப் பட்டிமோ, செல்கதிர் ஞாயிறே ! நீ.

அறாஅலின்று அரிமுன்கைக் கொட்டும் பறாஅப் பருந்தின்கண் பற்றிப் புணர்ந்தான் கறாஅஎருமைய காடு இறந்தான் கொல்லோ? உறாஅத்தகைசெய்து இவ்வூருள்ளான் கொல்லோ?

செறாஅது உளனாயின் கொள்வேன்; அவனைப் பெறாஅது யான் நோவேன்; அவனை எற்காட்டி, சுறாஅக்கொடியான் கொடுமையை நீயும், உறாஅ அரைச! நின்ஒலைக்கண் கொண்டீ; மறாஅ அரைச! நின்மாலையும் வந்தன்று; அறாஅது; அணிக இந்நோய்.

தன்நெஞ்சு ஒருவற்கு இணைவித்தல் யாவர்க்கும் அன்னவோ காம! நின் அம்பு! கையாறு செய்தானைக் காணின், கலுழ்கண்ணால் பைளன நோக்குவேன்; தாழ்தானைப் பற்றுவேன்; ஐயம்கொண்டு என்னை அறியான் விடுவானேல் ஒய்எனப் பூசல் இடுவேன்மன், யான் அவனை மெய்யாகக் கள்வனோஎன்று,

வினவன்மின் ஊரவிர்! என்னை; எஞ்ஞான்றும் அடாஅ நறஉண்டார் கோல மருள விடாஅது உயிரொடு கூடிற்று என் உண்கண் படா.அமை செய்தான் தொடர்பு.

கனவினால் காணியகண் படாஆயின், நனவினால், ஞாயிறே! காட்டாய் நீஆயின்,

35

40

45

50

55

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நெய்தற்_கன்னி.pdf/264&oldid=590342" இலிருந்து மீள்விக்கப்பட்டது