பக்கம்:நெய்தற் கன்னி.pdf/265

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நெய்தற் கன்னி 263

பனைஈன்ற மாஊர்ந்து அவன்வரக், காமன் கணைஇரப்பேன் கால்புல்லிக் கொண்டு. 60

எனவாங்கு,

கண்இனைபு கலுழ்பு எங்கினள், தோள்ஞெகிழ்பு வளைநெகிழ்ந்தனள், அன்னையோ! எல்லீரும் காண்மின், மடவரல் மென் நடைப் பேடை துணைதரத், தற்சேர்ந்த 65 அன்ன வான்சேவல் புணர்ச்சிபோல், ஒண்ணுதல் காதலன் மன்ற அவனை வரக்கண்டு, ஆங்கு ஆழ்துயரம் எல்லாம் மறந்தனள், பேதை நகைஒழிந்து, நானுமெய் நிற்ப இறைஞ்சித், தகையாகத் தையலாள் சேர்ந்தாள், நகையாக 70 நல் எழில் மார்பன் அகத்து.

வரைவிடைப் பிரிந்து நீட்டித்துழித் தலைவி பிரிவாற்றகில்லாது நாணுவரை பிறந்து கலங்கி மொழிந்து அறிவழிந்துழி, அவன் வந்து சாரத் தெளிந்தமை கண்டார் கூறிற்று என்று கூறியது.

1. ஆறு - நல்வழி, அறவினை - அறச்செயல், 2. தேறு - தெளிந்த, நறவு - மதுவகை, 4. இயலியாள் - நடந்தவள். 5. புலம்பு ஊர - தன்மை மிக, விலங்காக - குறுக்காக, 7. கெடுத்தாள் - இழந்தவள். 11. உழை- அருகில். 12. ஏமுற்றார் - வருந்தினவர். 13. நகை - அன்பு:நகையின் மிக்க காமம் - பெருந்திணைக் காமம்.14. வீழ்வார் - விரும்புவார். 16. நீத்தக்கடை - பிரிந்தபோது. 17. மூசிமொய்த்துக் கொண்டு. 18. கலைஇய கலந்துவிட்ட ஏஎர்- அழகு, 32. ஓம்பு - உன்னைக் காப்பாற்றிக் கொள். 33. நல்கா - அன்பு காட்டாத. 34. சாம்பி - மழுங்கி, பட்டிமோ - மறைக. 36. அறா அவின்று - நீங்காமல்; அரி - மெல்லிய மயிர் கொட்டும் - சுழலும். 37. பறா அப்பருந்து - கைவளை 39. உறாஅத்தகை - என்னோடு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நெய்தற்_கன்னி.pdf/265&oldid=590343" இலிருந்து மீள்விக்கப்பட்டது