பக்கம்:நெய்தற் கன்னி.pdf/268

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

266 ஒ. புலவர் கா. கோவிந்தன்

இன்பம் நுகரும் இனிய வழக்கத்தை மேற்கொண் டிருந்தனர். அவ்வாறு இணைந்து செல்லும் அவர்க்கு, அவர் காணும் மாலைக் காட்சிகளின் மாண்புமிகு தோற்றம் மனம் நிறை மகிழ்ச்சியை அளிக்கும். இயல் பாகவே இன்பத்தில் ஆழ்ந்து கிடக்கும் அவர் உள்ளத்தை மேலும் இன்புறச் செய்யும். அவர் அகத்தில் உறையும் காதல் உணர்வை மேலும் உரம் ஊட்டி வளர்க்கும். இவ்வாறு இன்ப வெள்ளத்தில் ஈர்த்துச் செல்லப் பெற்று, இனிது நடைபெற்று வந்தது அவர் இல்வாழ்க்கை.

ஒருநாள் பேரரசனிடமிருந்து ஒலையொன்று வந்தது. தன் நாட்டின் மீது பாய்ந்து விட்ட பகைவர் படை யொன்றைப் பாழ் செய்து, நாட்டைக் காக்க, விரைந்து செல்லுமாறு பணித்திருந்தான் மன்னன். பேரரசன் ஏவிய பணி அது. மேலும் தன் நாட்டு மக்களின் வாழ்வைக் காக்க வேண்டிய விழுமிய பணி. அதனால், இளைஞன், வாளேந்தி உடனே புறப்பட்டு விட்டான். கணவன் மேற்கொண்டு செல்லும் கடமைச் சிறப்பினை உணர்ந் திருந்தமையால், அவளும் அவனை அன்போடு வழியனுப்பினாள்.

இளைஞன் சென்று நாட்கள் சில கழிந்தன. கணவன் விரைவில் வீடு திரும்பி விடுவன் எனக் கருதி அவள் ஆற்றியிருந்தாள். ஆனால் அவன் வந்திலன். பகைவர் பெரும் படையை முற்றிலும் முறியடித்த பின்னல்லது வருதல் முறையாகாது. ஆதலின், அவன் அப்படையை அறவே அழிப்பதிலேயே ஆர்வம் காட்டி ஆங்கேயே இருந்து விட்டான். அதனால் அவள் எதிர் நோக்கியவாறு விரைவில் வந்திலன். அவன் பிரிவை அவளால் தாங்கிக் கொள்ள இயலவில்லை; அவனையே நினைந்து நினைந்து

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நெய்தற்_கன்னி.pdf/268&oldid=590346" இலிருந்து மீள்விக்கப்பட்டது