பக்கம்:நெய்தற் கன்னி.pdf/269

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நெய்தற் கன்னி இ. 267

வருந்தினாள்; மனையகத்தே அடைபட்டுக் கிடப்பதால் துயர் கொள்ளும் மனம், மாலைக் காட்சிகளைக் காணின், அத் துயரை ஒருவாறு மறக்கவும் செய்யும் எனும் நினவைால், ஒருநாள் மனையை விட்டு வெளிப்போந்து மாலைக் காட்சிகளைக் கண்டு நின்றாள். -

உலகம் தோன்றிய தொல்லூழிக் காலம் முதலாக, இவ்வுலகத்து இருளைப் போக்கி ஒளி அளிக்கும் தொழிலைத் தவறாது மேற்கொண்டு திரியும் ஞாயிறு, உலகப் பொருள்கள் ஒவ்வொன்றையும் தன் ஆணைப்படி ஆட்டுவிக்க வல்லோனாய உலக முதல்வன் ஆணையைத் தலைமேல் தாங்கி ஆற்றுவான் வேண்டிக், கண்பெற்ற பயனை உலகத்து உயிர்கள் இழந்து போமாறு, உலகெங்கும் இருள் பரவும் வண்ணம் தன் கதிர்களைத் தன்பாலே ஒடுக்கிக் கொண்டு, மேலைத் திசை மலைகளுக்கு இடையே சென்று மறைந்து கொண்டிருந்தான். அழகுமிகு அக்காட்சியைக் கண்டாள் அவள். ஆனால், மனத்துயர் மறைய மாலைக் காட்சிகளைக் காண வந்தவள் உள்ளத்தை அக்காட்சி கண்ணிர் பெருகச் செய்துவிட்டது. நாடு காக்கும் பணியே பெரும் பணியாகக் கொண்ட பெருமைசால் குடியிற் பிறந்து, பேரரசன் ஆணையேற்றுப், பகைவரைப் பாழ் செய்யப் படைகொண்டு போயிருக்கும் கணவனையும், அவன் பிரிவால் பயனற்றுப் பாழுறும் தன் காதலையும், ஞாயிற்றின் மறைவு நினைப்பூட்டி விடவே நெடிது வருந்தினாள்.

மேலைத் திசை நோக்கி நின்று மறையும் ஞாயிற்றைக் கண்ணுற்றமையால் கலங்கிய அவள், அந்நினைவை மறக்கத் தன் பார்வையைக் கீழ்த்திசைப்பால் போக்கி னாள். நீல நிறக் கடற்பரப்பின் மீது, தண்ணொளி பரப்பி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நெய்தற்_கன்னி.pdf/269&oldid=590347" இலிருந்து மீள்விக்கப்பட்டது