பக்கம்:நெய்தற் கன்னி.pdf/270

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

288 இ. புலவர் கா. கோவிந்தன்

எழும் வெண்ணிலவைக் கண்டாள். கண்கொள்ளாக் கவின் அளிக்கும் அக்காட்சியைக் கண்டு, சிறிதே தன்னை மறந்திருந்தவள், அக்காட்சிப் பகையைப் பாழ் செய்து புகழ் ஒளி பரப்பும் தன் கணவனின் அருள் ஒழுகும் அழகிய திருமுகக் காட்சியை, அவள் அகக் கண்முன் கொண்டுவந்து நிறத்திவிடவே, அவள் அவனை நினைந்து வருந்தினாள். -

மலை வாயிலில் சென்று மறையும் ஞாயிறும், திரையொலிக்கும் கடல்மீது எழும் திங்களும் காலன் நினைவையே நினைப்பூட்டக் கண்டு கலங்கியவள், தன் கண்களை அவற்றின்பாற் செல்ல விடாது, கழிநீரை நோக்கினாள்; கரிய கழியில் காலையில் மலர்ந்து மணம் நாறிய மலர்கள், ஞாயிறு மறைந்து மாலை வந்துற்றதும் வாடி வனப்பிழந்து போனதைக் கண்டாள். அவற்றின் நிலைக்கு இரங்கினாள். அந்நினைவு சிறிது பொழுதே அவற்றின் நிலை கண்டு இரங்கியவள், அவையும், தன் துயர் நிலையையே நினைப்பூட்டுவது அறிந்து நெடிது வருந்தினாள். மலர்ச்சி ஊட்டும் ஞாயிற்றின் ஒளியை இழந்துவிட்டமையால், கூம்பிவிட்ட அம் மலர்கள், உடன் இருந்து இன்பம் ஊட்டும் கணவன் அண்டையில் இல்லாமையால், இன்பக் கிளர்ச்சியும் எழுச்சியும் அற்று அடங்கிக் கிடக்கும் தன் அகக்காட்சியைக் காட்டக் கண்டு கலங்கினாள்; தன்னை மறந்தாள்; வாய் விட்டுப் புலம்பினாள்; தன் அகத்துயர் புறத்தார்க்கும் புலனாகு மாறு அவ்வாறு புலம்புவது, தன் பெண்மைக்குப் பெருமைக் கேடாம் என்பதையும் மறந்தாள்.

"ஏ மாலையே! கணவனோடு கூடிக் களிப்புற்று வாழ்ந்த காலத்தில் எம் இன்பத்தை மேலும் வளர்க்கும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நெய்தற்_கன்னி.pdf/270&oldid=590348" இலிருந்து மீள்விக்கப்பட்டது