பக்கம்:நெய்தற் கன்னி.pdf/271

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நெய்தற் கன்னி ஒ 269

இனிய துணையாய் விளங்கிய நீ, அன்பு காட்டி அண்ணத்துக் கொள்ள வேண்டிய அக் கணவர், நான் அழுது அழுது அழிந்து போமாறு, பிரிந்து போய்விட்டதை எண்ணி வருந்தி நிற்கும் இப்போது, என்னை மேலும் வருத்துகின்றனையே, இது நின் தகுதிக்கு ஏற்றதோ?

"ஏ மாலையே! பண்டு கணவனோடு கூடி வாழ்ந்து களித்திருந்தபோது, எம் காதலை மேலும் மேலும் வளர்க்கும் நற்றொண்டினை நன்கு ஆற்றிய நீ என்னால் மனம் நிறைந்த இன்பம் நுகர்ந்த என் கணவர், என்னை மறந்து, தாம் என்பால் பெற்ற அவ்வின்பத்தை, எனக்குத் தர எண்ணாது, என்னைத் தனியே விடுத்துச் சென்று, நனிமிகச் செய்மைக்கண் உள்ள நாட்டில், நீண்ட நாட்களாக வாழ்வதால் வருந்தி வாடும் என்னை, மேலும் வருத்துகின்றாய். இது நின் தகுதிக்குத் தக்கதோ?

"ஏ மாலையே! பிரிந்து போய் மறந்து வாழும் கணவனைத் தேடிக் கொண்டு வந்து தந்து துணைபுரியும் நல்லெண்ணம் நினக்கு இல்லை; மாறாகக், கணவனைப் பிரிந்து வாழும் என் கலக்கத்தை மேலும் வளர்த்து வருத்தம் தருகின்றாய். அம்மட்டோ? கணவனைப் பிரிந்து கலங்கும் என் போல்வார் கண்டு மேலும் கலங்குமாற், கணவனைப் புணர்ந்து களித்து வாழும் காரிகையர்க்குக், காதல் இன்பம் பெறப் பெருந்துணை புரிகின்றாய். முறை கெட்ட இக்காரியமல்லது, வேறு நல்லது புரிய நினக்குத் தெரியாதோ?" என வாய்விட்டுப் புலம்பி வருந்தினாள்.

இவ்வாறு வருந்துவாளின் வருத்த நிலையினை, அவ்வூரார் சிலர் கண்டு, தாமும் கண்ணிர் விட்டுக் கலங்கினர். அந்நிலையில், சேய் நாடு சென்றிருந்த அவள் கணவன், பகைவர் படையை அழித்து, அவரால் தன்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நெய்தற்_கன்னி.pdf/271&oldid=590349" இலிருந்து மீள்விக்கப்பட்டது