பக்கம்:நெய்தற் கன்னி.pdf/273

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நெயதற் கன்னி ஒ 27

மாலை நீ, கலந்தவர் காமத்தைக் கனற்றலோ செய்தாய்மன்; நலம்கொண்டு நல்காதார் நனிநீத்த புலம்பின்கண் அலந்தவர்க்கு அணங்காதல் தக்கதோ நினக்கு? 15

மாலைநீ, எம் கேள்வன் தருதலும் தருகல்லாய், துணையல்லை பிரிந்தவர்க்கு நோயாகிப் புணர்ந்தவர்க்குப் புணையாகித் திருந்தாத செயின் அல்லால் இல்லையோ நினக்கு? எனவாங்கு, 20 ஆயிழை மடவரல் அவலம் அகலப், பாயிருள் பரப்பினைப் பகல் களைந்ததுபோலப் போய் அவர் மண்வெளவி வந்தனர் சேய்உறை காதலர் செய்வினை முடித்தே.”

வேந்தற்கு உற்றுழிப் பிரிந்த கணவனை நினைந்து புலம்பிய தலைவி, அவன் வெற்றிப் புகழோடு வீடு திரும்பக் கண்டு களித்தாளைக் கண்டு ஊரார்

பாராட்டியது இது.

1. தொல் இயல் - பழைய முறை, ஞாலம் - உலகம். 2. தலைவைத்தல் - ஏற்றுக் கொள்ளுதல். 3. கல் - மலை. அடைபு - அடைந்து பெயர- மறைய.5. மல்லல் - நிறைந்த ஊர்பு-தோன்றி, மால் - மயக்கம் தரும்; சீப்பு - அழிக்க. 6. இல்லவர் - இல்லாதவர்; வாழ்க்கையில் பொருள் அற்றவர்; உள்ளத்தில் அன்பு அற்றவர்; இரும் - கரிய. 7. இறுத்தந்த தங்கியிருக்கும். 9. இறைச்சி - துணை. 13. கனற்றல் - வளர்த்தல். 14. புலம்பு - தனிமை. 15. அலந்தவர் - வருந்தியவர் அணங்கு - வருத்தம். 22. பகல் - ஞாயிறு. 23. அவர் - பகைவர். 24. சேய் - சேய்நாடு; காதலர், வினை முடித்து, மண்வெளவி, அவலம் அகல வந்தனர் என முடிக்க,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நெய்தற்_கன்னி.pdf/273&oldid=590351" இலிருந்து மீள்விக்கப்பட்டது