பக்கம்:நெய்தற் கன்னி.pdf/274

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

32

வரையாமையின் வருந்தினள் பெரிதே

அரசகுடியிற் பிறந்தவன் அவன். கடல் வளத்தால் கவின் மிக்க நாட்டில் அரசோச்சியிருந்த நல்லோன் மகன் அவன். அரசன் மகனாய்ப் பிறந்திருந்தமையால், அவன் தன் நாட்டு நாற்படை முரசு முழங்கப் பகைவர் நாட்டின் மீது பாய்ந்து செல்லும் காட்சிச் சிறப்பைக் கண்டு களித் திருந்ததோடு, தன் பெரும்படை பகையரசனுக்குரிய அரணை முற்றி வளைத்துக் கொண்டாக்கால், அவ்வரணகத்து வாழும் அரசன் நெஞ்சம் எத்துணை நடுக்கத்திற்குள்ளாம் என்பதையும் அறிந்திருந்தான். .

அரசனுக்கு மகனாகப் பிறந்தான், அரசர்க்குரிய படையறிவு மட்டும் பெற்றிருத்தல் போதாது. தன்னாடும், மக்களும் நல்வாழ்வு வாழ வேண்டின், அவர்களை ஆளும் உரிமை கொண்ட தன்பால் ஒழுக்க நெறி மிக்க உயர்ந்த நிலையை உணர்த்தவல்ல உலகியல் அறிவும் நன்கு வாய்ந்: திருத்தல் வேண்டும் என்பதையும் உணர்ந்திருந்தான். அதனால் அவ்வொழுக்க நெறியை உணர்த்த வல்ல

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நெய்தற்_கன்னி.pdf/274&oldid=590352" இலிருந்து மீள்விக்கப்பட்டது