பக்கம்:நெய்தற் கன்னி.pdf/275

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

೧gipು ಹಣೆಗಾಗಿ $ 273

நல்லாசிரியனைத் தேடி அடைந்து, அவர்பால் சுற்றம் பேணல், செய்ந்நன்றி மறவாமை, வாய்மை வழுவாமை, முதலாம் உயர்ந்த உண்மைகளைக் கற்றுத் தேர்ந்திருந் தான்; ஆசிரியர்பால் அறிவு பெற விரும்பிய அவன், அறிவளிக்கும் ஆசிரியர்க்கு அவர் உள்ளம் மகிழுமாறு உற்றுழி உதவ வேண்டும், உறுபொருள் கொடுத்தல் வேண்டும். ஆளும் அரசன் தான் எனத் தன்னை உயர்வாக வும், தன் ஆட்சிக் கீழ் வாழும் ஒரு குடிமகன் என ஆசிரியரைத் தாழ்வாகவும் மதிக்கும் மடமை கூடாது என்ற கற்கு முறைகளை அறிந்து கற்றுத் தேர்ந்திருந்தான்.

நல்லாசிரியனை அடைந்து, நாடாள்வதற்கு வேண்டும் அரசியல் நூல்களோடு, நல்லொழுக்க நெறி கற்பிக்கும் அறிவியல் நூல்களையும், கற்றுத் துறைபோய அவன், ஒரு நாள் ஒரு பெண்ணைக் கண்டான். அவள் பால் தன் நிலைக்கு ஒத்த பண்புகள் பொருந்தியிருக்கக் கண்டு, அவள்பால் காதல் கொண்டான். அவன் அறிவும் ஆண்மையும் அறிந்து அவளும் அவனைக் காதலித்தாள். அன்று முதல் இருவரும் கலந்து பழகினர். ஆனால், அவர் காதலை இருவர் பெற்றோரும் அறியார். ஆதலின், அவ்விரு வரும் பலர் அறியப் பழக மாட்டாது களவொழுக்கம் மேற்கொண்டு களிக்கத் தலைப்பட்டனர். சில நாட்கள் சென்றன. கண்ட நாள் முதல் அன்று வரை, ஒரு நாளும் தவறாது வந்து கொண்டிருந்தவன் வருகை தடைப்பட்டது. இன்று வந்திலன்; நாளை நில்லான் எனும் நம்பிக்கையில் நாட்கள் சில சென்றன; பல நாள் கழியவும் அவன் வந்திலன்; அதனால் அவள் கவலை மிகுந்தது; உள்ளக் கவலை உடலை அழித்தது. அவள் உடல் நலக் கேட்டினைக் கண்ணுற்ற ஊர்ப் பெண்டிர், அவள்

நெய்தல்-18

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நெய்தற்_கன்னி.pdf/275&oldid=590353" இலிருந்து மீள்விக்கப்பட்டது