பக்கம்:நெய்தற் கன்னி.pdf/278

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

276 ஒ. புலவர் கா. கோவிந்தன்

பாயும் இக்காட்சி என்னையே கவர்ந்து விட்டதே! அது வேந்தர் குலத்தில் வந்து உன்னைக் கவர்ந்து விட்டதில் வியப்பில்லையன்றோ? அத்தகு கடற்கரைச் செல்வம் மிக்க கடல் நாட்டுத் தலைவன் நீ!” எனக் கூறிப் பாராட்டினாள். பின்னர், அவன் நாட்டுக் கடல் வளத்தைத் தான் பாராட்டிய முறையால், 'இவள் இவ்வாறு பாராட்டிய காரணம் யாது? என உளம் ஆராய, உரை யெழ மாட்டாது மயங்கி நின்ற அவனுக்குத் தான் வந்த காரியத்தை எடுத்துரைக்கத் தொடங்கினாள்.

"அன்ப! காதல் இன்பம் பெற மாட்டாது, அது பெறத் துடித்திருந்த காலத்தில் உனக்கு அவ்வின்பத்தைக் கொடுத்து, உன்னைப் பேரின்ப வெள்ளத்தில் திளைக்கச் செய்தவள் என் தோழி. அவள், இப்போது, நீ அளிக்கும் இன்பத்திற்கு ஏங்கி நிற்கிறாள். அது பெற மாட்டாமை யால் பெரிதும் வருந்தி அழுகிறாள். அவளுக்கு அவள் விரும்பும் அவ்வின்பத்தை அளித்துக் காக்க வேண்டும் என்ற கருத்துணர்ச்சி உன்பால் இல்லை. அன்ப! இது நினக்கு அறநெறியாகாது. அன்ப! தான் தளர்ந்திருந்த காலத்தில் தானே முன்வந்து தனக்கு உதவிய ஒருவன், பின்னொரு காலத்தில் வறுமையுற்று வாழ்விழந்து வருந்து வனாயின், அதை அறிந்து கொளலுமே விரைந்தோடிச் சென்று அவனைக் காக்க வேண்டுவது, அவன்பால் உதவி பெற்றோனின் உயிர்க் கடமையாதல் வேண்டும். அங்ங்ணமின்றி அறிந்தும் அவன், அவனுக்கு உதவ முன்வாரானாயின், அத்தகைய அறக் கொடியோன் இவ்வுலக வாழ்விழந்து அழிந்து போவது உறுதி. செய்ந்நன்றி கொன்றதால் உண்டாய தீமையின் விளைவு, அவனை இவ்வுலகில் வாழ்விழக்கச் செய்வதோடு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நெய்தற்_கன்னி.pdf/278&oldid=590356" இலிருந்து மீள்விக்கப்பட்டது