பக்கம்:நெய்தற் கன்னி.pdf/279

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நெய்தற் கன்னி ஒ 277

நில்லாது, மறுமையிலும் சென்று, அவனை வருத்தும். இது உறுதி. அன்ப! தனக்கு அறிவூட்டி அறநெறியும், அரசியல் நெறியும் காட்டிய ஆசிரியனுக்கு அவன் உள்ளம் மகிழுமாறு உறுபொருள் கொடுக்க வேண்டுவது, கல்வி கற்ற ஒருவனுக்குக் கடமையாகும். அக்கடமையை அவன் மறப்பனாயின், அவன் தன் கைப்பொருளையும் இழந்து அழிவுறுவன் என்பதை நீ நன்கு அறிந்துள்ளனை. அவன் அழிவு எத்துணைப் பெரிதோ அத்துணைப் பெரிதாம் நன்றி கொன்றவன் அழிவும். அவன் அழிவு எத்துணை உறுதியுடைத்தோ, அத்துணை உறுதியுடைத்து இவன் அழிவும். அன்ப! இதை நீ உணர்ந்து கொள்ளுதல் வேண்டும். .

"அன்ப! எம்மை முதல் முதலாகக் கண்டு, என் தோழிபால் காதல் கொண்ட அன்று, நீ, பிரியேன்; பிரியின் உயிர் தரியேன்! என, ஆங்குறையும் கடவுள் முன் ஆணையிட்டு உறுதி உரைத்தாய். அதை உண்மையென உளங்கொண்டே அவள் உன் காதலை ஏற்றுக் கொண்டாள். ஆனால், இன்று நீ அவ்வாணையைக் கைவிட்டு அவளை மறந்து வாழ்கின்ற்ாய். அதனால் அவள் உயிர், அவள் உடலை விட்டுப் பிரியும் காலத்தை எதிர் நோக்கி நிற்கிறது. அத்துணை வருந்துகிறாள் அவள். அன்ப! இது நின் பெருந்தகைமைக்குப் பொருந்தாது. அன்ப! உரைத்த சூள் பொய்த்தவன் உயர்வாழ்வு வாழ்தல் உலகியல் நெறிக்குப் பொருந்தாது. அவன் தன் வாளாண்மை அளிக்கும் வெற்றிச் சிறப்பால், வானோர் உலகம் புகுந்து விழுமிய வாழ்வு பெற்றவிடத்தும், சூளுறவு பொய்த்ததால் வந்த கேடு, ஆங்கும் விடாது. சென்று அவனை வருத்தும்; இது உறுதி. அன்ப! செல்வ வாழ்வில் சிறக்க வாழும் ஒருவன், தன்னைச் சார்ந்து வாழும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நெய்தற்_கன்னி.pdf/279&oldid=590357" இலிருந்து மீள்விக்கப்பட்டது