பக்கம்:நெய்தற் கன்னி.pdf/28

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3

வந்தான் மறந்தாள்

வெளம் கொழிக்கும் ஒரு நாட்டிற்கு வேந்தனாய் வந்து வாய்த்திருந்தான் ஆண்மை யிழந்த ஒர் அரசிளங் குமரன். ஆற்றலில் குறைந்திருந்த அவனுக்கு நாற்படையும் நன்கு வாய்க்கவில்லை. படைவன்மையோ, போர்த் திறனோ வாய்க்கப் பெறாத இளைஞன் அந்நாட்டு அரியணையில் அமர்ந்துள்ளான் என்பதை அறிந்து கொண்ட பகைநாட்டு மன்னன் ஒருவன், தன் படைத் துணையால் அவனைப் போரில் தொலைத்து, அந்நாட்டில் தன் ஆட்சியை நிலை நாட்டி விட்டான். படைவன்மை வாய்க்கப் பெற்றிருந்த அப்பகை மன்னன்பால் பண்பு வாய்க்கவில்லை. பண்பற்றவனாதலின், அவன் உள்ளத்தில் அருளோ, அவன் செயலில் அறமோ தலைகாட்ட அஞ்சின. அரசன் எவ்வழி, அவ்வழிக் குடிகள் என்பது உலகியல்பு. ஆதலின், அவன் ஆட்சிக் கீழ்ப் பணிபுரியும் அரசியல் அலுவலாளர்களும்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நெய்தற்_கன்னி.pdf/28&oldid=590105" இலிருந்து மீள்விக்கப்பட்டது