பக்கம்:நெய்தற் கன்னி.pdf/280

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

278 இல் புலவர் கா. கோவிந்தன்

கேளிர்க்கும் வழங்கித் தானும் வாழ்தல் வேண்டும். அதோடு, அச்செல்வ நிலையை உயர்த்த நாள்தோறும் ஊக்கம் காட்டி உழைத்தலும் வேண்டும். இவ்விரண்டும் செய்யாதவன் செல்வம், நாளடைவில் சிறிது சிறிதாக அழிந்து போக, அவன் மட்டும் தனியே நின்று அழிந்து போவன். அன்ப! அவன் அழிவு எத்துணை உறுதியும் விரைவும் உடைத்தோ, அத்துணை உறுதியும் விரைவும் உரைத்த சூள் பொய்த்தவன் அழிவிற்கும் உண்டாம்! அன்ப! இதையும் நீ மனங்கொள்ளல் வேண்டும்.

"அன்ப! செய்ந்நன்றிக் கேடு, சூளுரை பொய்த்தல் ஆயபெரும் பிழைகளால் உண்டாகும் கேடு எத்துணைப் பெரிதாம் என்பதை உணர்ந்து உளங்கொள்ளல் வேண்டும். நின் குளுறவை நம்பி, நின்னை ஏற்று, நினக்குப் பேரின்பப் பெருவாழ்வு அளித்த என் தோழியின் துயரம் மிகமிகப் பெரிது. சினம் மிக்க பெருவேந்தன் ஒருவன் நாற்படையோடும் வந்து தன் அரணை முற்றி விட்டான் என்பதை அறிந்த அவ்வரணகத்தான் உள்ளம் எத்துணைப் பாடுபடுமோ அத்துணைப் பாடுபடுகிறது அவள் உள்ளம். தனக்குப் படைத்து வழங்கவல்ல நல்லோன் வரவைக் காண அவன் உள்ளம் எவ்வளவு துடிக்குமோ, அவ்வளவு துடிக்கிறது, உன் துணையைப் பெற என் தோழியின் உள்ளம். இதை உணர்ந்து, அவளை வரைந்து கொண்டு வாழ்வளிக்கும் முயற்சியினை விரைந்து மேற்கொள்ளும் வண்ணம் உன்னை வேண்டிக் கொள்கிறேன்," என்று கூறி வணங்கி விடைபெற்று மீண்டாள்.

"நிரை திமில் களிறாகத் திரையொலி பறையாகக், கரைசேர் புள்ளினத்து அஞ்சிறை படையாக, அறைக கால்கிளர்ந்தன்ன உரவுநீர்ச் சேர்ப்ப! கேள்;

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நெய்தற்_கன்னி.pdf/280&oldid=590358" இலிருந்து மீள்விக்கப்பட்டது