பக்கம்:நெய்தற் கன்னி.pdf/281

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நெய்தற் கன்னி ல் 279

கற்பித்தான் நெஞ்சு அழுங்கப் பகர்ந்து உண்ணான்

விச்சைக்கண் தப்பித்தான் பொருளேபோல் தமியவே தேயுமால், 5 ஒற்கத்துள் உதவியார்க்கு உதவாதான்; மற்றவன் எச்சத்துள் ஆயினும் அஃது எறியாது விடாதே காண்.

கேளிர்கள் நெஞ்சு அழுங்கக் கெழுவுற்ற செல்வங்கள் தாள் இலான் குடியேபோல் தமியவே தேயுமால், சூள்வாய்த்த மனத்தவன் வினைபொய்ப்பின், மற்றவன் 10 வாள்வாய் நன்றாயினும் அஃது எறியாது விடாதே காண்.

ஆங்கு அனைத்து; இனிப் பெரும் அதன் நிலை நினைத்துக்

காண்; சினை இய வேந்தன் எயிற்புறத்து இறுத்த வினைவரு பருவரல் போலத் 15 துனைவரு நெஞ்சமொடு வருந்தினள் பெரிதே." -

தலைவன் வரைவு நீட்டித்துழி, தோழி, தலைவியது ஆற்றாமை கூறித் தலைவனை வரைவு கடாயது.

1. நிரை - வரிசை, திமில்- மீன்படகு, 2. அம்சிறை-அழகிய தோகை, அம்சிறைப் புள்ளினம் என மாற்றுக. 3. கால்கிளர்த்தல் - படையெடுத்துப் போதல் உரவுநீர் - ஆற்றல் மிக்க கடல் நீர். 4. அழுங்க- வருந்த 5. தப்பித்தான் - பிழை செய்தவன். 6. ஒற்கம் - தளர்ச்சி, எச்சம் - இறந்து பெறும்நிலை, எறியாது - வருத்தாது. 8. கெழுவுற்ற - வந்து அடைந்த, 9. தாள் - முயற்சி, 11. வாள்வாய் - வாளின் கூர்மையால் பெற்ற பெருநிலை. 13. அனைத்து - அத்தன்மைத்து. 14. இறுத்த வந்து தங்கிய 15. விளைவரு-போர் வினையால் உண்டாம்; பருவரல் - வருத்தம். 16. துணை வரு - துடிக்கும். -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நெய்தற்_கன்னி.pdf/281&oldid=590359" இலிருந்து மீள்விக்கப்பட்டது