பக்கம்:நெய்தற் கன்னி.pdf/282

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

33

கண்டனம் அல்லமோ?

இளவேனிற் பருவத்து மாலைக் காலம் அது. தமிழகத்துப் பேரூர் பெருமைசால் குடியினைச் சேர்ந்த பெண் ஒருத்தி, தன் மனையின் தலைவாயிற்கண் நின்றிருந்தாள். ஊரில் வேனில் விழா நடைபெற்றுக் கொண்டிருந்தது. விழாக் கொள்ளும் சிவன் கோயிலி னின்றும், இறைவன் திருவுருவம், ஆடை அணிகளாலும், அரிய மலர் மாலைகளாலும் நன்கு ஒப்பனை செய்யப் பெற்று உலா வந்து கொண்டிருந்தது. ஊர் மக்களெல்லாம் ஒன்று திரண்டு இறைவன் திருவுலாக் காட்சியைக் கண்டு களிப்புக் கடலில் ஆழ்ந்திருந்தனர். ஆனால், அப் பெண்ணின் கண்ணோ, கருத்தோ அவ்விழா நிகழ்ச்சி எதிலும் கலந்து கொள்ளவில்லை. நகர்க்கோடியில் வந்து கூடும் நீண்ட பெரிய சாலையிலேயே நிலைத்துக் கிடந்தன அவள் கண்கள். அக் கண்களினின்றும், நீர்த் துளிகள், கண்ணாடி முத்துக்களெனக் கசிந்து கொண்டேயிருந்தன.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நெய்தற்_கன்னி.pdf/282&oldid=590360" இலிருந்து மீள்விக்கப்பட்டது