பக்கம்:நெய்தற் கன்னி.pdf/283

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நெய்தற் கன்னி ஒ 281

அந்நிலையிலேயே அவள் நெடிது பொழுது அசைவற்றுக் கிடந்தாள்.

உலா வரும் இறைவன் திருவுருவக் காட்சியைக் கண்டு களித்தவாறே ஆங்கு வந்த அப்பெண்ணின் ஆருயிர்த் தோழி, அவளை அந்நிலையில் கண்டாள். கண்ட தோழியின் உள்ளம் துயர்க்குள்ளாகிவிட்டது. சற்று முன், விழாக் காட்சிகளைக் கண்டு அவள் பெற்ற பேரின்பம் அவள்பால் விடைபெற்றுச் சென்று விட்டது. கணவன் பிரிவால் கலங்கியிருக்கும் இவளை எவ்வாறு தேற்றுவேன் எனக் கவலையுற்றாள். அத் தோழி. பெண்ணைப் பைய அணுகினாள். 'பெண்ணே! பொருளிட்டி வரப் போய் விட்டார் காதலர்; பிரிந்துறை வாழ்வை நான் பொறேன் என்பதை அவர் அறியா ராயினர்; என்னே அவர் அன்பு இருந்தவாறு!” என்றெல்லாம் எண்ணிக் கண்ணிர் விட்டுக் கலங்குகிறது உன் உள்ளம். பெண்ணே ! வருந்தும் உன் உள்ளத்தின்பால் குறை கண்டிலேன். அது பருவத்தின் கோளாறு. இன்ப வாழ்வில் இடையீடின்றிக் கிடக்க வேண்டிய காலத்தில், அவ்வின்பத்தை அளிக்க வல்ல அவர் போய் விட்டாரே என எண்ணி அது வருந்துவது இயல்பே. ஆனால், நீ இப்போது பெற்றிருக்கும் புது நிலை உனக்களித்திருக்கும் புதிய பொறுப்பினையும் நீ உணர்தல் வேண்டும். உணர்ந் தால் உன் கவலை கணப் பொழுதில் மறைந்து போம்.

"பெண்ணே ! பொருள் தேடிப் போயிருக்கும் உன் கணவர் உன் அன்பிற்கு அடிமைப் படாதவர் அல்லர், அவரை, உன்பால் ஈர்க்க வல்ல பேரழகு வாய்க்கப் பெறாதவள் அல்லள் நீயும். கங்கையைச் சடையில் கரந்து, காளை மீது ஊர்ந்து உலாவரும் இறைவனின் பொன்னார்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நெய்தற்_கன்னி.pdf/283&oldid=590361" இலிருந்து மீள்விக்கப்பட்டது