பக்கம்:நெய்தற் கன்னி.pdf/284

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

282 இல் புலவர் கா. கோவிந்தன்

திருமேனியை வென்றது உன் மேனி. அவன் மார்பிற் கிடந்து அசையும் அழகிய அணிகளை நிகர்க்கும் தலைக் கோலங்களைத் தாங்கி நிற்கும் உன் கருநிறக் கூந்தலின் கவினுக்கும் ஓர் ஈடு உண்டாமோ? பொன்னிற மேனிப் பொலிவாலும், கருநிறக் கூந்தற் கவினாலும் நீ பெற்றிருக்கும் பேரழகை ஒரு முறை பார்த்தவர் உன்னைக் கணப் பொழுது பிரிந்திருக்கவும் கருதுவரோ? ஆனால் அத்தகு பேரழகுடையாய் நீ என்பதை அறிந்தும், அவ்வழகிற்கு அடிமைப்பட்டுப் போன தன் உள்ளத்தை ஒருவாறு தன் வயப்படுத்திக் கொண்டு போயுள்ளார் உன் கணவர்.

"பெண்ணே ! அவ்வாறு போயிருக்கும் உன் காதலர், தாம் மேற்கொண்டு செல்லும் பணி எண்ணற்ற இடையூறுகளைக் கொண்டது என்பதை அறியாதவரோ, அவ்விடையூறுகளை அகற்றி அப்பணியில் வெற்றி கண்டு மீள்வது விரைவில் முடியக் கூடியது, எளிதில் இயலக் கூடியது என எண்ணி ஏமாறுபவரோ அல்லர். அப்பணி இடையூறும் இன்னலும் மிக்கது என்பதை அவர் நன்கு அறிவார். மரம் செடி கொடிகள் மண்டி வளர்ந்திருக்கும் மலைகளின் இடை இடையே நுழைந்து நுழைந்து செல்வதால், செல்வாரைச் செல்லும் வழி அறிய மாட்டாது மயங்க வைக்கும் அம்மலைக் காட்டு வழி, கோடை ஞாயிற்றின் கொடிய வெப்பத்தால் ஆங்காங் குள்ள மூங்கிற் புதர்கள் நெருப்புற்று ஒருபால் நின்று எளிய, மலையுச்சி மரங்களில் பற்றிக் கொண்ட பெருந்தீ மற்றொரு பால் பெருக, அவ்விரு பெரும் தீயும் ஒன்றோடொன்று போரிடுவது போல் ஒன்று கலந்து, வான் அளாவ எழுந்து பரந்து, அம்மலையிடை வழியை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நெய்தற்_கன்னி.pdf/284&oldid=590362" இலிருந்து மீள்விக்கப்பட்டது