பக்கம்:நெய்தற் கன்னி.pdf/286

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

284 இ. புலவர் கா. கோவிந்தன்

ஆழவிடுவது மாண்பன்றே! பிரியேன் என ஆணையிட்டு அன்பு கொண்ட மனைவியை, அவ்வாணையைக் கை விட்டுப் பிரிந்து போவது அறநெறி ஆகாது என்பதையும் அவர் உள்ளம் அறியும். அறிந்தும் பிரிந்து போயுள்ளார்.

"பெண்ணே! இந்நிலையை எண்ணிப்பார். மனைவி பிரிதற்கரிய பேரன்பினள்; காணத் தெவிட்டாக் கவின் உடையள் என்பதை அறிந்தும், செல்லும் வழி செல்ல. லாகாக் கொடும்ை மிக்கது; அவ்வழிச் செல்வார் உயிர் கொண்டு மீள்தல் அரிதினும் அரிதாம் என்பதை அறிந்தும், கணவனைப் பிரிந்து வாழ நேர்ந்த தனிமை நினைவாலும், கணவன் கடந்து செல்லும் காட்டு வழியின் கொடுமை நினைவாலும் மனைவி மனத்துயர் மிகுந்து மாண்டு போவாள் என்பதை அறிந்தும், அவ்வாறு அவளை மாளாத் துயரில் ஆழவிட்டுப் போவது அறநெறி நிற்பார்க்கு அழகாகாது என்பதை அறிந்தும், அவர் பிரிந்து போயுள்ளார் என்றால், அவர் மேற்கொண்டு போயுள்ள பணி எத்துணைச் சிறந்ததாதல் வேண்டும் என்பதை, நீ சிறிது எண்ணிப் பார்ப்பாயாக. அன்புக் கேட்டினும் சிறந்தது அது, உயிரிழப்பினும் உயர்ந்தது அது, அறக் கேட்டினும் ஆக்கம் உடைத்து அது என உணர்ந்தமையால் அன்றோ, அவர் அது குறித்துப் பிரிந்து போயுள்ளார். பெண்ணே அவர் தேடிப் போயிருக்கும் பொருள், உண்மையில் அத்துணைச் சிறப்பு வாய்ந்ததே. மதிப்பற்ற் வரையும் மதிப்புள்ளவராக்கும் மாண்புடையது அப்பொருள். அறத்தையும் இன்பத்தையும் ஒருங்கே ஈட்டி அளிக்கவல்ல அத்துணைச் சிறப்புடையது அப்பொருள். ஈத்துவரும் இன்பத்தையும், ஈதலால் உளவாகும் இறவாப் புகழையும் அளிக்கவல்ல உயர்வுடையது அப்பொருள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நெய்தற்_கன்னி.pdf/286&oldid=590364" இலிருந்து மீள்விக்கப்பட்டது