பக்கம்:நெய்தற் கன்னி.pdf/287

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நெய்தற் கன்னி ஒ 285

தன்னையும் வாழ வைத்துத் தான் வாழும் உலகையும் வாழ வைக்கும் தனிச் சிறப்புடையது அப்பொருள். பொருளின் இவ்விழுச் சிறப்பினை அவர் விளங்க உணர்ந்ததினாலேயே, அவர் இவ்வளவு இடர்ப்பாடு களையும் எண்ணாது பிரிந்து போயுள்ளார். பெண்ணே! கணவன் கருத்தறிந்து நடப்பதே கற்புமிகு மனைவிக்குக் கவினாம். அதை மறந்து, நீ இவ்வாறு மனத்துயர் கொள்வது மாண்பாமோ? நிற்க.

"பெண்ணே ! பிரிந்து போயிருக்கும் உன் கணவர் தம் பிரிவால் உன் பொன்னார் மேனி பொலிவு குன்றும் என்பதை அறிவார். அவர் அவ்வழகுக் கேட்டினைக் காணப் பெறார். ஆதலின் தாம் மேற்கொண்டு சென்றுள்ள பணி எத்துணை சிறந்ததேயாயினும், கடந்து செல்ல வேண்டிய காட்டு வழி எத்துணை இடையூறு மிகுந்ததே யாயினும், அதை எளிதிற் கடந்து போய், விரைந்து வினை முடித்துக் கொண்டு வீடு வந்து சேர்வர். குறித்துச் சென்ற காலம் கடந்து போகா முன்பே வந்து சேர்வர். அவர் வாய்மை வழுவாதவர். திருவாதிரைப் பேருடையானாய நம் பெருமான் உவந்து அணியும் இச் சண்பக மலர் பருவம் பொய்யாது மலர்தல் எவ்வளவு உண்மையும் உறுதியும் உடைத்தோ, அத்துணை உண்மையும் உறுதியும் உடைத்து, அவர் உரைத்துச் சென்ற

உரை,

"பெண்ணே ! மற்றொன்றையும் நீ மறந்து விட்டனை. உன் கணவர் சென்ற காட்டு வழி கொடுமைகள் மலிந்தது என்பதை நீ அறிவாய். அவ்வழி, தன்பால் வரும் நல்லோரையும் நாசம் பண்ணும்; அவ்வழியில் சென்றுள்ளார் உன் கணவர். அவர்க்கு ஆங்குக் கேடு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நெய்தற்_கன்னி.pdf/287&oldid=590365" இலிருந்து மீள்விக்கப்பட்டது