பக்கம்:நெய்தற் கன்னி.pdf/32

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

30 ஒ புலவர் கா. கோவிந்தன்

நிலை, இரந்து நிற்பார்க்கு இல்லையெனக் கூறும் கொடி யோர்களின் உள்ளத்துக் குறுகிய நிலையை நினைப்பூட்ட, நின்று வருந்தினாள்.

மேற்குத் திசையை நோக்கினாள். உயிர்களெல்லாம் ஒடுங்க, ஒலியெல்லாம் அடங்க நின்ற அவ்வந்திக் காலத்தில், செக்கச் செவேலெனச் சிவந்து தோன்றும் அச்செவ்வானத்தில், வெண்பிறை தோன்றும் காட்சியைக் கண்டாள். உலகெலாம் ஒருங்கு அழியும் ஊழிக்காலத்தில், உலகத்து உயிர்களை யெல்லாம் கொன்று வெல்லும் கூற்றுவன், அவ்வுயிர்களின் இரத்தக் கறை படிந்த தன் வாய்க் கோடியில், உயிர்களைத் தின்று தின்று ஒளி பெற்ற எயிறுகள் தோன்ற நகைப்பது போன்ற நினைவு அவள் நெஞ்சில் எழவே, நெடிது நின்று புலம்பினாள்.

கணவன் உடன் இருந்தால், உள்ளத்திற்குக் களிப்பூட்ட வேண்டிய இம்மாலைக் காட்சிகள், அவன் இல்லாமையால் கலக்கம் தருகின்றனவே! இது கணவன் இல்லாக் குறையன்றோ? இதை அறியாது கொடுமை செய்யும் இம்மாலையின் கொடுஞ் செயலை என்னென் பேன் என, எண்ணி வருந்தினாள். துணையாய் இருந்து துயர் போக்க வேண்டிய என் கணவர், என்னைத் தனியே விட்டுப் போய்விட்டார்; அது மட்டுமன்றே. எனக்கு உற்ற ஒரே துணையாய் இருந்த என் உள்ளத்தையும் உடன் கொண்டு போய்விட்டார். அதனால்,அல்லற்பட்டு அழுது நிற்பேனை, ஏ மாலைக் காலமே! மேலும் துன்புறுத்த நீ வந்து சேர்ந்தாய். வெள்ளத்தில் வீழ்ந்து, கரை ஏறும் வழி காணாது கலங்கும் மானின் மார்பு நோக்கி அம்பெய்யும் கொடியான் போலும், உன் செயல் கண்டு நீ நாணிலையோ? அன்பால் என்னை வாழ்விக்க வேண்டிய

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நெய்தற்_கன்னி.pdf/32&oldid=590109" இலிருந்து மீள்விக்கப்பட்டது