பக்கம்:நெய்தற் கன்னி.pdf/36

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4

இடும்பை இரிந்தது

கீழ்க்கடலை அடுத்து இருந்தது ஒர் ஊர். மேற்றிசை யில் வளங் கொழிக்கும் மலை யொன்றைப் பெற்றிருக்கும் அப்பேரூரை முழுநிலா நாளன்று காணக் காண்பார்க்குக் கோடிக் கண்கள் வேண்டும். அதிலும் வேனிற் காலத்து வெண் திங்கள் நாள் வியப்பூட்டும் அழகு பெற்று விளங்கும். பகலெல்லாம் பேரொளி தந்த ஞாயிறு, மேலைத்திசை மலையில் சென்று மறைந்து கொண் டிருக்கும் அதே நேரத்தில், கீழ்த்திசையில் வெண்திங்கள் கடல் நீரில் மூழ்கி எழும் மங்கையர் முகம்போல் கடல் நீரினின்றும் எழுந்து ஒளி வீசும் காட்சி, அம்மம்ம! கண் கொள்ளாக் காட்சியாம்.

இயற்கை அழகு மிக்க அக் கடற்கரைப் பேரூரின் பெருமை மிக்க குடியில் பிறந்த ஓர் இளைஞன், ஒரு நாள் விரைந்து ஒட வல்ல குதிரைகள் பூட்டப்பெற்ற தன் நெடிய தேரில் ஏறி, அக் கடற்கரையை ஒட்டியவாறே ஒட்டிச் சென்றான். சில காவதம் சென்றதும், கடற்கரை மணலில், தன் தோழியரோடு மணல் வீடு கட்டியும் மலர் கொய்தும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நெய்தற்_கன்னி.pdf/36&oldid=590113" இலிருந்து மீள்விக்கப்பட்டது