பக்கம்:நெய்தற் கன்னி.pdf/38

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

36. இ. புலவர் கா. கோவிந்தன்

அவள் இவ்வாறு வருந்துவதைக் கண்ட தோழி, இளைஞனை எவ்வாறேனும் கண்டு, அவள் நிலையை அவனுக்குக் கூறி, அவளை விரைந்து வந்து வரைந்து கொள்ளுமாறு வேண்டிக் கொள்ள வேண்டும் என எண்ணினாள். அதனால், அவளைக் காணும் கருத்துக் கொண்டு, கடற்கரைக்கு ஒவ்வொரு மாலையும் சென்று காத்திருந்தாள். பலநாள் கழிய, ஒருநாள் வந்த அவனைக் கண்டாள். வந்தானை எதிர்சென்று வணங்கி, "அன்ப! நின்பால் என் தோழி கொண்டுள்ள காதல் எத்துணைப் பெரிது என்பதை அறியாதே, நீ அவளை அறவே மறந்து, அங்கேயே தங்கி விட்டாய். காதல் நிறைவேறப் பெறாமையால், அவள் கொள்ளும் காதல் நோய், அவளால் தாங்கிக் கொள்ளும் அளவுடையதன்று. அத்தகைய பெருநோயை அவளுக்கு அளித்து விட்டு, நீ மறைந்து வாழ்கிறாய். அதனால் வருந்திய அவள் மேனி நனிமிக மெலிந்து விட்டது. தன் உள்ளம் விரும்பும் இனிய துணைவன் நீ எனக் கருதுகிறாள் அவள். ஆனால் உடனிருந்து துணை புரிய வேண்டிய நீயோ, அவளை விடுத்து அகன்றுவிட்டாய். அதனால் அவள் கொண்ட உள்ளத் துயர் உரைக்கும் திறம் உடையதன்று.

"அன்ப! காதல் நோய் கட்டுக் கடங்காது பெருகிய காலத்தும், உள்ளத்தை ஒருவழிப் படுத்தி அமைதி காணும் ஆற்றல் உன்பால் அமைந்திருக்கக் காண்கிறேன் நான். இவ்வாற்றல் நினக்கு இயல்பாக வாய்ந்தது அன்று; நின் நாட்டு இயற்கைப் பொருள்களிடத்தில் எங்குமிலா அமைதி நிலவுகிறது. அவ்வியற்கை காட்டும் அமைதியைக் காண்பதால், நீயும் அமைதிநிறை உள்ளம் பெற்று விளங்குகிறாய். அன்ப! நின் நாட்டில் ஒளி வீசிய ஞாயிறு மலைவாயில் சென்று மறைந்து விட்டதே என்று, மதி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நெய்தற்_கன்னி.pdf/38&oldid=590115" இலிருந்து மீள்விக்கப்பட்டது