பக்கம்:நெய்தற் கன்னி.pdf/41

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நெய்தற் கன்னி இ. 39

நாம் கண்டோம். இன்னமும் சிறிது நேரம் சண்டே இருந்திருந்தால் அது இறந்து போயிருக்கும். ஆனால், கரை நோக்கி மீண்டும் பாய்ந்த அக்கடல் அலை, மீன் படும் துயரைப் பார்க்கப் பொறாமையால், கொண்டு வந்து கொடுமை செய்த தானே, அதன் துயரைப் போக்கவும் வேண்டும் என்ற பேருள்ளம் கொண்டு, மீண்டும் கொண்டு சென்று கடல் நீரில் விட்டு விட்டது. கடல் அலைக்கு உள்ள இவ்விரக்க உள்ளம் நினக்கும் உண்டாதல் வேண்டும். தந்தையின் பெருமனையில் வாழ்ந்திருந்த அவளைக் களவின்பம் பெறும் கருத்தால் வெளிப்படுத்தி வருத்திய நீ, அவளை மணந்து கொண்டு, நின் மனைக்குக் கொண்டு சென்று குடியோம்ப வேண்டும். அக் கருத்து நின் உள்ளத்தில் எழ வேண்டு கிறேன். அவ்வெண்ணம் உண்டாயின், அதற்கு ஏற்ற காலம் இதுவே. இனியும் காலம் கடத்தினால், அவள் வாழாள். ஆகவே, வரைவிற்காம் முயற்சிகளை விரைந்து மேற்கொள்ள, இப்போதே தேர் ஏறிப் போவாயாக!” என வேண்டிக் கொண்டாள்.

"ஒண்சுடர் கல்சேர, உலகு ஊரும் தகையது தெண்கடல் அழுவத்துத் திரைநீக்கா எழுதரூஉம் தண்கதிர் மதியத்து அணிநிலா நிறைத்தரப் புள்ளினம் இரைமாந்திப் புகல்சேர, ஒலியான்று வள்ளிதழ் கூம்பிய மணிமருள் இருங்கழி 5 பள்ளிபுக்கது போலும் பரப்புநீர்த் தண் சேர்ப்ப! -

தாங்கரும் காமத்தைத், தணந்து நீ புறம்மாறத் தூங்குநீர் இமிழ்திரை துணையாகி ஒலிக்குமே; உறையோடு வைகிய போதுப்ோல் ஒய்யென

நிறை ஆனாது இழிதரூஉம் நீர்நீந்து கண்ணாட்கு. 10

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நெய்தற்_கன்னி.pdf/41&oldid=590118" இலிருந்து மீள்விக்கப்பட்டது