பக்கம்:நெய்தற் கன்னி.pdf/42

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

40 புலவர் கா. கோவிந்தன்

வாராய்நீ புறம்மாற, வருந்திய மேனியாட்கு ஆர்இருள் துணையாகி அசைவளி அலைக்குமே; கமழ் தண்தாது உதிர்ந்து உக ஊழ்உற்ற கோடல்வி இதழ்கோரும் குலைபோல இறைநீவு வளையாட்கு

இன்துணை நீ நீப்ப இரவினுள் துணையாகித் 15 தன்துணைப் பிரிந்து அயாஅம் தனிக்குருகு உசாவுமே; ஒண்சுடர் ஞாயிற்று விளக்கத்தால் ஒளி சாம்பும் நண்பகல் மதியம்போல் நலம் சாந்த அணியாட்கு.

எனவாங்கு எறிதிரை தந்திட இழிந்தமீன் இன்துறை மறிதிரை வருந்தாமல் கொண்டாங்கு, நெறிதாழ்ந்து சாயினள் வருந்தியாள் இடும்பை பாய்பரிக் கடுந்திண்தேர் களையினோ இடனே.”

தலைவன் ஒருவழி தணந்தவிடத்துத், தோழி தலைவி ஆற்றாமை கூறி வரைவு கடாயது.

1. சுடர் - ஞாயிறு, கல் - மலை. ஊரும் - பரவும். 2. அழுவம் - பரப்பு. 4. புகல் - இருப்பிடம்; ஆன்று - அடங்கி, 7. தணந்து - ஒருமுறைபிரிந்து புறமாற - கைவிட 8. தூங்குநீர் - அலைவீசும் கடல், இமிழ்திரை - ஒலிக்கும் அலை. 9, உறை - நீர்த்துளி, போது - மலர். 10. நிறை ஆனாது - நிறுத்த மாட்டாது; 12. அசைவளி - வீசும்காற்று. 13. ஊர்உற்ற - வரிசையாக அமைந்த (இதழ்கள்); கோடல் - காந்தள். வி- மலர். 14. இறை- முன்கையினின்றும். நீவு - கழலுகின்ற; 16. அயாஅம் - வருந்தும், குருகு - நாரைப்பேடு; உசாவும் - உற்றது வினாவும். 17. சாம்பும் - கெடும். 18. சாய்ந்தகெட்ட 20. எறிதிரை - கரைநோக்கி எழும் அலை; மறிதிரை - கடல் நோக்கி இழியும் அலை. நெறிதாழ்ந்து - நீ முறைகெட்டமையால். 22. சாயினள், தளர்ந்து, களையின் இது இடன் எனக் கொண்டு வந்து முடிக்க. - -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நெய்தற்_கன்னி.pdf/42&oldid=590119" இலிருந்து மீள்விக்கப்பட்டது