பக்கம்:நெய்தற் கன்னி.pdf/46

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

44 இ புலவர் கா. கோவிந்தன்

கண்ணழகு எங்கோ சென்று மறைந்துவிட்டது. இவ்வாறு, உன் உள்ளத்தில் காதல் நோயை வளரவிட்டு ஊருக்குச் சென்றவன், நாட்கள் பல ஆகியும் மீண்டிலன்; உன் நினைவற்று அங்கேயே நின்று விட்டான். உன் காதலை மறந்து, உன்னைக் கைவிட்டு விட்டான். அவன் அத்தகையன் ஆதலைக் கண்டும், அவனை அயலான் எனக் கொண்டு மறந்து போவதை விடுத்து, அவனையே நினைந்து வருந்துகின்றனை. அவனை உரிமையுடையான் எனக் கொண்டு, அவன் வாராமை கண்டு, அவனோடு சிறிதே புலக்கவும் செய்கிறது உன் சிந்தை. இது உனக்குப் பொருந்தாது. ஆனால் பொருந்தா இவ்வொழுக்கத்தி லேயே ஆழ்ந்து விட்டாய் நீ அவன் புகழைப் பல நூறு படியாகப் பாராட்டுகின்றாய். அவன் அன்பிற்கு ஏங்கி அழுகின்றன. உன் கண்கள். இவ்வாறு அலமருகிறது உன் ஏழை நெஞ்சம். ஆனால் உன் காதலைக் கொள்ளை கொண்ட அவன், இவற்றை யெல்லாம் கருதுகின்றா னல்லன். அவன் உன் காதலையே மறந்து திரிகிறான். அது மட்டுமன்று, பெண்ணே! அவன் உன்னைக் காதலிக்கும் தகுதியுடையவனும் அல்லன். கன்னி மகளிரைக் காதலிக்கும் கட்டிளமை அவனை விட்டு மறைந்து ஆண்டுகள் பல ஆகிவிட்டன. அவன் உன்னைக் காதலிக்கும் முன்னரே, மணம் ஆகி மனையறம் மேற்கொண்டு விட்டான். ஒருவன் ஒருத்தியோடே வாழ வேண்டும் என்ற ஒழுக்க நெறி கல்லாக் கயவன் அவன்அவனை மணந்து வாழும் மங்கையர் பலராவர். அவர்பால் அவன் பேரன்பு காட்டுகிறான். அத்தகை யானே உன் காதலன்! அறக் கொடியோன். கண்ணால் காணவும் தகுதி யில்லாக் கசடன். நல்லோன் எனத் தேர்ந்து தெளிதற்கு இல்லா நயமிலி, உள்ளத்தால் ஒரு முறை நினைந்து பார்க்கவும் கூடா உதவாக்கரை. அவன்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நெய்தற்_கன்னி.pdf/46&oldid=590123" இலிருந்து மீள்விக்கப்பட்டது