பக்கம்:நெய்தற் கன்னி.pdf/47

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நெய்தற் கன்னி இ 45

அன்னன் என்பதை அறிந்து கொண்டேன். ஆகவே, பெண்ணே அவன்பால் கொண்ட காதலை இப் பொழுதே மறந்துவிடு!” எனக் கூறினாள்.

காதலன் ஒழுக்கக் கேடு குறித்துத் தோழி கூறிய அனைத்தையும் அப்பெண் கேட்டாள்; கேட்டும் அவள் நிலையில் சிறு மாற்றமும் இடம் பெறவில்லை. அவள் சிந்தையில் சிறிதும் சினம் பிறக்கவில்லை. மாறாகச் சிறிது நகைத்தவாறே. "தோழி! காதலன் இயல்பு குறித்து நீ கூறிய அனைத்தும், நீ கூறாமுன்பே நான் அறிவேன். காதலன் கன்னி நிலை கடந்தவன். மனைவியர் பலரைப் பெற்று மகிழ்பவன். அம்மனைவியர்பால் பேரன்பு காட்டுபவன் என்பதை யெல்லாம் நானும் அறிவேன். அறிந்தே அவன்பால் காதல் கொன்டேன். ஒருத்தியோடு வாழும் உயர்ந்த ஒழுக்கத்தை மறந்து விட்டமையால் வழுக்கி வீழ்ந்த அவன் வாழ்க்கைக் கேடு ஒருபால் வந்து வருத்து மாயினும், அவன் அம்மகளிர்பால் காட்டும் ஒத்த அன்பு நிலை, என்னை அவன்பால் ஈர்க்கும். அவன் அன்பு தூய்மையானது. மகளிர் பலரை மணந்தது அவன் தவறன்று; அது அம் மகளிரின் அழகு செய்த தவறு; அன்னார் அணியும் அழகும் அவனை அடிமை கொள்ளும் ஆற்றல் வாய்ந்து விட்டன. அதனால் அவன் அத்துணை பேரையும் மணக்கத் துணிந்து விட்டான். துணிந்து மணங் கொண்டவன் மணந்த பின்னர் அவர்பால் பண்டு காட்டிய அன்பில் சிறிதும் குறை காட்டினானல்லன். ஒருத்திபால் பேரன்பு காட்டி, ஒருத்திபால் அவ்வன்பில் குறை கண்டானல்லன், மணங் கொண்ட மனைவியர் அனைவர்பாலும் ஒத்த அன்பே காட்டுகிறான். அவர் அன்புத் தளையால் கட்டுண்டு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நெய்தற்_கன்னி.pdf/47&oldid=590124" இலிருந்து மீள்விக்கப்பட்டது