பக்கம்:நெய்தற் கன்னி.pdf/48

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

46 புலவர் கா. கோவிந்தன்

அடங்கிக் கிடக்கிறான்; அவன் அன்பு அத்தகையது என்பதை அறிந்தது என் நெஞ்சம் அவ்வன்பின் அளவும் ஆற்றலும், அவன்பால் காணலாம் ஒழுக்கக் கேட்டினும் உயர்ந்து விளங்கக் கண்டது; அதனாலேயே அது அவனையே நினைந்து வருந்துகிறது. நம்போலும் நங்கையர் பின் திரிவாானை நாமும் நயப்பது நாண் உடையார்க்கு நயம் பயப்பது ஆகாதே என எண்ண மறுக்கிறது; அது, அறிவுடையார்க்கு அழகாகாதே என்பதை உணரும் உணர்விழந்து கிடக்கின்றது; அதனால் எப்பொழுதும் அவன் நினைவாய்க் கிடந்து, கெட்டு அலைகிறது; அவன் வந்து, சிறிது பொழுது தங்கிச் சிறிதே அன்பு காட்டினும், அந்நினைவால் உள்ளம் துள்ள உணர்விழந்து மகிழ்கிறது.

"தோழி! மகளிர் அழகில் மயங்கி உணர்விழப்பவன் அவன் என அறிந்தமையால், அதற்கு ஒரு நம்பிக்கை; நாமும் அவனை அடிமை கொண்டு விடலாம் என்ற துணிவு எனக்கும் உண்டு; அவன் மனைவியரை நோக்க நாம் அழகில் குறைபாடுடையரல்லேம். நம் அழகு ஊரார் அனைவரும் ஒருங்கே பாராட்டும். உயர்வுடையது. அவனை அடிமை கொள்ளும் ஆற்றல் நம் அழகிற்கு உண்டு. ஆனால், அவ்வழகு அவனை அடிமை கொள்ள அதற்கு ஒன்று உதவ வேண்டும். அவன் அண்மையிலேயே வாழும் வாய்ப்பு அதற்கு வாய்க்க வேண்டும்; அந்நிலை மட்டும் வாய்த்து விடுமாயின், அவனை அடிமை கொண்டு விடுவேன்; பிரிந்து மறந்து வாழும் அவனை என்னோடு இறுகப் பிணித்துக் கொள்வேன் ! என்றெல்லாம் கூறித் திரிந்தது. அந்நினைவால் இரவின் நடுயாமத்திலும் நம்மை உறங்க விடாது, உறக்கத்தை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நெய்தற்_கன்னி.pdf/48&oldid=590125" இலிருந்து மீள்விக்கப்பட்டது