பக்கம்:நெய்தற் கன்னி.pdf/49

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நெய்தற் கன்னி ல் 47

நம்மினின்றும் பிரித்துக் கொண்டு சென்று ஒளித்துவைத்து விட்டு, நம்மோடு காதல் நோயில் கிடந்து வருந்திய அந்நெஞ்சம், இப்போது நம்மை மறந்து அவன்பால் சென்று விட்டது. நடுயாமத்திலும் நம்மை விட்டுப் பிரியா உற்ற துணையாய் இருந்த நம் நெஞ்சும் நம்மை விட்டுப் போன பின்னரும் நாம் உயிர் கொண்டு வாழ்தல், அது சென்ற இடத்திற்கே நாமும் செல்லக் கருதாது ஈண்டே கிடந்து கலங்கி உயிர் வாழ்தல் இனி இயலாது. மனைவியர் பலரை மணந்து வாழ்பவனைக் காதலிப்பதினும், காதலன் வாழும் இடம் சென்று அவனைத் தன் காதலால் அணைத்து வாழாது தனித்துக் கிடப்பது நகைப்பிற் கிடமாம்!” எனக் கூறுமுகத்தான், "தோழி! முன்னே சென்று என் வரைவிற்கு வழி காணுவாயாக!" எனக் கூறாமல் கூறினாள்.

"கோதை ஆயமும் அன்னையும் அறிவுறப் போதெழில் உண்கண் புகழ்நலன் இழப்பக் காதல் செய்தருளாது துறந்தார் மாட்டு ஏதின்றிச் சிறிய துணித்தனை; துன்னாசெய்து அமர்ந்தனை, பலவுநூறு அடுக்கினை, இணைபு ஏங்கி அழுதனை, 5 அலவலை உடையை என்றி தோழி! - கேளினி,

மாண்எழில் மாதர் மகளிரோடு அமைந்தவன் காணும் பண்பிலன் ஆதல் அறிவேன்மன், அறியினும் பேணி அவன் சிறிது அளித்தக்கால் என் 10 நாண் இல் நெஞ்சம் நெகிழ்தலும் காண்பல்;

இருள்உறழ் இருங்கூந்தல் மகளிரோடு அமைந்த்வன் - தெருளும் பிண்பிலனாதல் அறிவேன்மன், அறியினும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நெய்தற்_கன்னி.pdf/49&oldid=590126" இலிருந்து மீள்விக்கப்பட்டது