பக்கம்:நெய்தற் கன்னி.pdf/50

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

48 இ. புலவர் கா. கோவிந்தன்

அருளி அவன் சிறிது அளித்தக்கால் என் மகுளி நெஞ்சம் மகிழ்தலும் காண்பல்; 15

ஒள் இழை மாதர் மகளிரோடு அமைந்தவன் உள்ளும் பண்பிலனாதல் அறிவேன்மன், அறியினும் புல்லி அவன் சிறிது அளித்தக்கால் என் அல்லல் நெஞ்சம் அடங்கலும் காண்பல்;

அதனால், 20 யாம நடுநாள் துயில்கொண்டு ஒளித்த காம நோயிற் கழிஇய நெஞ்சந் தான்.அவர் பாற் பட்டதாயின் நாம்உயிர் வாழ்தலோ நகை நனி உடைத்தே."

களவொழுக்கம் ஒழுகிய தலைவன் இடையிட்டுப் பிரிந்து தொன்முறை மனைவியரொடு புணர்ச்சி எய்தி இருந்தானாக, அதனை அறிந்து ஆற்றாத தலைவியைத் தோழி வன்சொல் வழங்கினாளாக, அத்தலைவி, தன் நெஞ்சு இவன் வயத்ததாயது கூறியது.

1. கோதை.ஆயம் - மாலை போல் வரிசையாக வந்து ஆடும் தோழியர், 2. போதெழில் - மலர் போலும் அழகு, 3. ஏதின்றி - அயன்மை கொள்ளாது. 4. துணித்தனை - வெறுத்தனை; துன்னா - பொருந்தாதன. அமர்ந்தனை - அதிலேயே ஆழ்ந்து விட்டாய். 5. இனைபு - வருந்தி. 6. அலவலை - அலமருதலை; என்றி - என்று கூறுகிறாய். 12 உறழ் - ஒத்த இரும் - கரிய, 13. தெருளும் - நல்லோன் எனத் தெளியும். 15. மருளி - மருட்சி மிக்க 16. இழை - அணிகள். 17. உள்ளும் - மனத்தால் நினைந்து பார்க்கத்தக்க 18. புல்லி - புணர்ந்து 19. அல்லல் - வருத்தம் 22. கழிஇய- மிக்க.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நெய்தற்_கன்னி.pdf/50&oldid=590127" இலிருந்து மீள்விக்கப்பட்டது