பக்கம்:நெய்தற் கன்னி.pdf/51

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

6

நெஞ்சே, நீ வருந்தினை!

கடலை யடுத்திருந்த கவின்மிக்க சிற்றுார் ஒன்றில் வாழ்ந்திருந்தாள் ஒரு கட்டழகி. கன்னிப் பருவத்தின் கடை வாயிலைக் கடக்கும் நிலையினளாய அவள், ஒரு நாள் தோழியரோடும் சென்று கடற்கரை மணலில் விளையாடி மகிழ்ந்திருந்தாள். அப்போது இளைஞன் ஒருவன் ஆங்கு வந்து அவள் ஆடல் அழகைக் கண்டு கருத்திழந்தான். அவன் இளமை யழகிற்கு அடிமைப் பட்டு விட்ட அவள் மனம் அவன்பால் சென்றது. அவன் நிலையும் அன்னதே ஆயிற்று. அன்று தொடங்கிய அவர் காதல் வாழ்வு நாள்தோறும் நிறைமதியென வளர்ந்தது. உற்றாரும் ஊராரும் காணாவாறு தம் காதலை வளர்த்தனர்; ஒவ்வொரு நாளும் வாய்ப்புக் கிடைக்கும் போதெல்லாம் ஒருவரை யொருவர் கண்டு களிக்கத் தலைப்பட்டனர். அவர்கள், தம் காதலை ஊரார் அறியாவாறு வளர்க்கக் கருதினராயினும், அவ்வூர்ப் பெண்டிர் சிலர் அவர்கள் களவொழுக்கத்தினைக் கண்டு கொண்டனர். கண்ட

நெய்தல்-4

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நெய்தற்_கன்னி.pdf/51&oldid=590128" இலிருந்து மீள்விக்கப்பட்டது