பக்கம்:நெய்தற் கன்னி.pdf/52

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

50 இ. புலவர் கா. கோவிந்தன்

தோடு அமைந்து விடாது, தாம் கண்டதைக் கூட்டியும் குறைத்தும் தமக்கு வேண்டியவரிடத்திலெல்லாம் கூறி வைத்தனர். இவ்வாறு, அச்செய்தி ஊர் முழுதும் பரவிற்று. அப்பெண்ணின் தாயின் காதிலும் அது சென்று எட்டிற்று. சின்னாட்களாக மகள் இயல்பில் நிகழும் மாற்றங்களை உணர்ந்து மகள் ஒழுகலாற்றில் தான் கொண்ட ஐயம் அச் செய்தியால் உறுதியானதைத் தாய் உணர்ந்தாள். அதனால் அன்று முதல், மகள் வீட்டை விட்டு வெளிச் செல்லாவாறு விழிப்பாய் இருந்து காக்கத் தொடங்கினாள்.

தாயின் காவல் மிகுதியால், முன்போல் தான் விரும்பிய போதெல்லாம் விளையாட்டை முன்னிட்டு வெளிப்போவாள் போல் சென்று, காதலனைக் கண்டு களிக்க முடியாமல், அப் பெண் கலங்கினாள். ஆனால் அவள் கொண்ட காதலோ, அவளை அடங்கியிருக்க விட்டிலது. அதனால் இரவில் எல்லோரும் உறங்கும் நடுயாமத்தில் ஒருவரும் அறியாவாறு வீட்டின் புறம் போய்த் தன்னைப் போலவே தன் வருகைக்காக வந்து ஆங்குக் காத்துக் கிடக்கும் காதலனைக் கண்டு களிக்கத் தொடங்கினாள். ஆனால் அவ்வழி எண்ணிலா இடையூறுகளுக்கு இடனாவது அறிந்து கலங்கிக் கண்ணிர் சொரிந்தாள். அதனால், மணந்து கொண்டு மனையற வாழ்வு மேற்கொள்ளப் பெரிதும் விரும்பினாள். ஒருநாள், தன் உள்ளத்தின் விருப்பத்தை இளைஞனுக்கும் மெல்லப் புலப்படுத்தினாள். களவின்ப வாழ்வில் களிப்பு மிகுதி யிருப்பதை உணர்ந்த அவன், அந்நிலையை அப்போதே பெற்றுவிட விரும்பிலனாயினும், இடையூறு அற்ற இன்ப வாழ்விற்கு அதுவே வழியாம் என உணர்ந்தான். அதனால்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நெய்தற்_கன்னி.pdf/52&oldid=590129" இலிருந்து மீள்விக்கப்பட்டது