பக்கம்:நெய்தற் கன்னி.pdf/54

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

52 இல் புலவர் கா. கோவிந்தன்

மாண்புமிகு காட்சியைக் கண்டு களித்தது அவள் உள்ளம், மலர் வீசும் மணத்தால் அம்மலர்களை அறிந்து அடைந்த தேன் வண்டுகளும் தும்பிகளும் அவற்றில் பொதிந்து கிடக்கும் புதுத் தேனை உண்ண, அம்மலர்களைச் சுற்றி வட்டமிட்டுப் பறந்தன. தேன் வண்டு திரிவதால் தோன்றும் ஒலி ஒருபால் ஒலிக்க, அவ்வொலிக்கு ஏற்பத் தும்பிகளின் ஊதல் ஒலி மற்றொருபால் எழ, இம் எனும் இனிய ஓசை அக்கடற் பரப்பெங்கும் சென்று ஒலித்தது. தன் அருளையும் ஆற்றலையும் உணர்த்தும் அழகிய பாக்களை அன்பர் பல்லாயிரவர் ஒருபால் நின்று பாட, அவர் பாடலுக்கேற்ற இனிய யாழ் ஒலியைச் சிலர் அவர் அருகிருந்து எழுப்ப, பாக்களின் பொருட் சிறப்பையும், யாழின் ஒசை இன்பத்தையும் கேட்டவாறே நீலநிற நெடுமால் துயில் கொள்ளும் காட்சியை நினைவூட்டும் அக் கடற்கரைக் காட்சியைக் கண்டு மகிழ்தற்கு மாறாகக் கண்ணிர் விட்டுக் கலங்கி நின்றாள்.

மலர்கள் வாய் திறந்து மணம் வீசும் பருவம் அறிந்து வந்து அம் மலர்களில் பொதிந்து கிடக்கும் தேன் வீண் போகாவாறு விரும்பி உண்ணும் இவ்வண்டு தும்பிகளுக்கு இருக்கும் உணர்வு என் காதலர்க்கு உண்டாகவில்லையே! கன்னிப் பருவம் கழிந்து காதற் பருவத்தில் காலடி எடுத்து வைத்து இன்பக் களஞ்சியமாய் நிற்கும் என்னை அடைந்து என்பால் இன்பம் துய்த்து என்னை மாண்புடைய வளாக்கும் மனம் அவர்க்கு இன்னமும் வாய்க்க வில்லையே! பாட்டும் இசையும் கேட்டு உறங்கும் பரந்தாமன் போலவும், வண்டும் தும்பியும் பாட, ஒலி அவிந்து உறங்கும் இக் கடற் கானல் போலவும், நான் என் காதலரோடு கூடி ஆற்றும் இல்லறச் சிறப்பறிந்து ஊரும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நெய்தற்_கன்னி.pdf/54&oldid=590131" இலிருந்து மீள்விக்கப்பட்டது