பக்கம்:நெய்தற் கன்னி.pdf/55

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நெய்தற் கன்னி 53

நாடும் ஒருங்கே புகழ, அக்கணவரோடு கிடந்து உறங்கும் அமைதி நிலவும் அவ்வுயர் இன்ப வாழ்வை நான் என்று பெறுவனோ என எண்ணி ஏங்கிற்று அவள் உள்ளம்.

இவ்வாறு தன் உள்ளம் இரவும் பகலும் அவன் நினைவேயாய்க் கிடந்து வருந்தவும், அதனை எண்ணிப் பாராத அவன்பால் சிறிதே வெறுப்புங் கொண்டாள். ஆனால், காதலன்பால் வெறுப்புக் கொள்ளினும், அதைக் காட்டிக் கொள்ளுதல் கூடாது என்றது அவள் உள்ளுணர்வு. அதனால் அவள் வெறுப்பு, தன்னை நினையாதவனையே நினைந்து நினைந்து வருந்தும் நெஞ்சின் மேல் சென்றது. அதனால், 'நெஞ்சே! நீ நினைந்துருகும் நம் காதலர், நமக்கு ஊரார் பழிக்கும் உறுநோய் அளித்தவராவர்; இவ்வாறு இரவும் பகலும் அழுது அழுது அழியும் அல்லலை நமக்கு அளித்த அறக்கொடியோருமாவர்; நம் கைவளைகள் கழன்றோடும் வண்ணம் நம் நலனைக் கெடுத்த நாணிலியுமாவர்; அவர் அத்தகையர் என்பதை அறிந்தும் அவரைக் காண அலைகின்றாய் நீ அவரைக் காண, அவர் ஊர்க்கு ஓடினாய். ஆனால், நீ ஆங்குச் சென்ற மாலைக் காலம், கண்முன் நிற்கும் பொருளையும் காண மாட்டாமைக்கும் ஏதுவாய காரிருள் பரந்த மாலைக் காலமாம்; மாலையின் இவ்வியல்பறிந்தும் நீ சென்றாய்; சென்ற நீ, அவரைக் கண்டாயோ? அல்லது காணாது வறிதேதான் வந்து சேர்ந்தாயோ? நெஞ்சே! காதலர் ஊர் கழிகளுக்கு அப்பாற்பட்டது: அக்கழிகளோ கொடிய சுறா மீன்களின் வாழிடம்; அவற்றைப் பகற் காலத்தில் கடக்கவும் மக்கள் அஞ்சுவர்; காதலரைக் கண்டு அவர் ஆகத்தை ஆரத் தழுவிக் கொள்ளும் ஆர்வமிகுதியால், கழிகளின் அக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நெய்தற்_கன்னி.pdf/55&oldid=590132" இலிருந்து மீள்விக்கப்பட்டது